மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை – ராகுல் காந்தி

மோடி பிரதமர் போல்  நடந்து கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்பொழுது பிரதமர் மோடி பேசுகையில் , நான் 30 நிமிடங்களாக பேசி வருகிறேன். இப்போது தான் அங்கு மின்சாரம் பாய்ந்துள்ளது. டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் … Read more

டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும்-ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி

டியூப் லைட்கள் இப்படித்தான் வேலை செய்யும் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி.  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது  மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், காந்தி காந்தி என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, மகாத்மா காந்தி உங்களுக்கு டிரெய்லராக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உயிர்மூச்சு என்று பேசினார். மேலும் அவர் பேசுகையில், எந்த … Read more

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச முடியுமா ? ராகுலுக்கு நட்டா கேள்வி

உத்திர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. இந்த சட்டம் குறித்து 10 வரிகள்  ராகுல் காந்தி தொடர்ந்து பேச முடியுமா என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் … Read more

நாங்க ரெடி, நீங்க ரெடியா-ராகுலுக்கு அமித் ஷா சவால்

குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாடு நடைபெற்றது. ராகுலுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் … Read more

டெல்லியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்

டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில்  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியில் ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் நேற்று  ஜே.என் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் ஆயுஷ் கோஷ் உட்பட பல மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த தாக்குதலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியுள்ளது. டெல்லி பல்கலைகழத்தில் மாணவர்களை தாக்கியது … Read more

புதிய அரசாங்கம்  சகாப்தத்தை உருவாக்கும் – ராகுல் காந்தி

ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன்  பதவியேற்றார். ஜார்க்கண்டில் உள்ள புதிய அரசாங்கம்  சகாப்தத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெற்றது. இதில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து … Read more

யார் பொய் சொல்வது ? நீங்களே முடிவு செய்ங்க ..ராகுல் காந்தி பதில்

சிறந்த பொய்யர் என்ற விருது ஒன்று இருந்தால் அந்த விருதிற்கு சரியானவர் ராகுல் காந்தி தான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.  யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், புதிய … Read more

இந்தாண்டின் மிக பெரிய பொய் மனிதர் ராகுல் காந்திதான்! – மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்!

‘பாஜக ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது’ என ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார். ‘2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி தான்.’ என விமர்சித்து தனது பதிலடியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்த்திய உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவில் வன்முறை அதிகரித்து விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு … Read more

உத்தரபிரதேசம் சென்ற ராகுல் ,பிரியங்கா தடுத்து நிறுத்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில்  போராட்டங்கள் நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற ராகுல், பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியது போலீஸ். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி கலவரங்களாகி பொது சொத்துக்கள் சேதம், உயிரிழப்பு என கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக 24 … Read more

நாட்டின் குரலை அடக்க முயற்சி -ராகுல் காந்தி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.  போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள் என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் … Read more