என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்!நடிகர் ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி என்று  சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றும்  ரஜினி கூறினார்.திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது அரசியல். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து கருத்து கூற … Read more

ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவிலிருந்து பழங்கள் இறக்குமதிக்கு தடை!

கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சம் காரணமாக  ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாம்பழம், பேரீட்சை, வாழைப் பழங்கள், காய்கறிகள் என எதையும் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக 14 பேர் உயிரிழந்த நிலையில், பழந்தின்னி வவ்வால்களால் இந்த வைரஸ் பரவுவதாக நம்பப்படுகிறது. மாநிலத்தில் பழங்களின் விற்பனை ஏற்கெனவே சரிந்த நிலையில் … Read more

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த்!

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று  தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இன்று  … Read more

கடலூர் ஆட்சியர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியிட மாற்றம் குறித்த போராட்டத்தில் உடன்பாடு !

கடலூர் ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில்,என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியிட மாற்றம் குறித்த போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சுரங்கம் 1, 2 ஆகியவற்றுக்கு ,நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1 ஏ-வில் பணியாற்றிய 41 பேர், மாற்றப்பட்டனர். இதை ஏற்க மறுத்து, திங்களன்று சுரங்கம் 1 ஏ பகுதியில் 22 தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். புதுச்சேரி மருத்துவமனையில்  அப்போது 7 பேர் விஷம் அருந்திய நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் … Read more

BREAKING NEWS:பல வருடங்களுக்கு முன் திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் மீட்பு!ரூ.150 கோடி மதிப்பிலான சிலைகள் குஜராத்தில் மீட்பு!

திருட்டுப்போன தஞ்சை பெரிய கோயில் சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில்: மாமன்னன் ராஜராஜசோழன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இக்கோவிலுக்கு 13 பஞ்சலோக சிலைகளை பொய்கை நாட்டை சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜ சோழனிடம் வழங்கி உள்ளார். இந்த சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜசோழன் … Read more

மக்களுக்கு இனிப்பான செய்தி! 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த பெட்ரோல், டீசல் விலை 63 காசுகள் குறைந்தது!

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கடந்த 16 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று காலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசலின் விலை 3 ரூபாய் 60 காசுகள் வரை அதிகரித்ததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more

சென்னையில் பேருந்தில் பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை!

அரசு பேருந்தில் பயணித்த ஐஐடி மாணவிக்கு சென்னையில்  பாலியல் தொல்லை தந்த நபரை சக பயணிகள் உதவியுடன் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 26 வயதான இளம்பெண் சென்னை ஐஐடியில் பயின்று வருகிறார். சேலத்தில் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு அரசு பேருந்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். அப்போது நள்ளிரவு நேரத்தில் சக பயணிகள் தூங்கும் போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார். முதலில் தூக்கத்தில் கால் தெரியாமல் பட்டிருக்கும் என மாணவி … Read more

ரொடோமேக் நிறுவனத்தின் ரூ.177 கோடி சொத்துகள் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முடக்கம்!

ரொடோமேக் பேனா நிறுவனத்தின் 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில்  அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 2,919 கோடி ரூபாய் கடன் பெற்று அதனை ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மனைவி சாத்னா கோத்தாரி ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் மற்றும் இயக்குனர்களுக்கு சொந்தமாக உத்தரப்பிரதேசம், … Read more

கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு ரூ.248.95 கோடி வருவாய்!

கடந்த நிதியாண்டில் 248.95 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம்  வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை தற்போது 70.52 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, அரசு அலுவலகங்களை காகிதமற்ற அலுவலகமாக மாற்றும் செயலியான e-office, அரசு துறையில் வெளிப்படை தன்மை மற்றும் அலுவலக கோப்புகளை தடையின்றி பரிமாற்றம் செய்துக்கொள்ள வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்த … Read more

ரயில்வே புதிய திட்டம்!ரயிலில் பயணச்சீட்டு உறுதியாவதற்கான வாய்ப்பு கணிப்பாக காட்டும் புதிய வசதி!

காத்திருப்போர் பட்டியலில் ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யும் போது, இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறித்து காட்டும் புதிய வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, காத்திருப்போர் பட்டியல் குறித்த எண்கள் மட்டுமே இதற்கு முன்பு காட்டப்படும். இந்நிலையில் குறிப்பிட்ட ரயிலில் சீராக பயணிப்போர் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, முன்பதிவு செய்தால் டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கு, எத்தனை சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதும் கணிப்பாக காட்டப்படுகிறது. நவீனப்படுத்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் பயணிகள் … Read more