ஆக்சன் படத்தை அடுத்து விஷால் நடிக்கப்போவது துப்பறிவாளன்-2வா? இரும்புத்திரை-2வா?!

நடிகர் விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்சன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டு படப்பிடிப்புகள் முடிந்து சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தை அடுத்தது இரும்புத்திரை-2 திரைப்படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் இரும்புத்திரை-2 திரைப்படத்தின் கதைக்களத்தில் இன்னும் வேலை செய்து விட்டு வருமாறு இயக்குனரிடம் கூறி அனுப்பிவிட்டாராம். ஆதலால், மிஸ்கின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான … Read more

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்து வந்த சைக்கோ என்ன ஆனது?! படத்தின் புதிய தகவல்கள்!

வித்தியாசமான கட்சிகளும், தெளிவான வசனங்கள் எவருக்கும் புரியும்படி கதை கூறுவது என தனது படங்களில் முத்திரை பதித்தவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் வெளியானது. அதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் சைக்கோ, இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரபிக்கப்பட்டுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் … Read more

இயக்குனர்கள் சுசீந்திரன் – மிஷ்கின் நடிப்பில் ‘சூட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் அனல் பறக்கும் ட்ரெய்லர்!

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்பட இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூடுபிடிக்க உத்தரவு திரைப்படம். இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் , இயக்குனர் சுசீந்திரன், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பரபர ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 14 எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. DINASUVADU

ஷங்கர் 25! கொண்டாடிய மணிரத்னம் , கெளதம் மேனன், மிஷ்கின் இன்னும் பலர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரமாண்டமும் காட்டி பிரமாண்ட வெற்றியும் அடைந்தார் ஜென்டில்மேன் படம் மூலம். அடுத்தடுத்து, தனது படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குனர் என்ற பட்டதையும் பெற்றுள்ளார். இவரது படங்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுகிறாரோ அந்த அளவிற்கு தனது படங்களில் சமுக கருத்துகளையும் வைத்து விடுவார். இவரது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் 1993 இல் வெளியாகி இருந்தது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை அடுத்து, இயக்குனர் மிஷ்கின், தமிழ் … Read more

இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் நடிப்பில் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!!!

வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து இயக்கும் இயக்குனர் மிஷ்கினும், யதார்த்த கதைகளங்களை கட்சிதமாக கையாளும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ . இந்த படத்தில் முன்னனி வேடத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை பி.கே.ராம் மோகன் என்பவர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் வங்கி கொள்ளை … Read more

இயக்குனர் மிஷ்கின் த்ரில்லர் படங்களை எடுக்க தடை! நீதிமன்றம் அதிரடி!!

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதன் பிறகு அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பரிவாளன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனராக உருவெடுத்தார். இவரது படங்களில் சைக்கோ கொலைகாரர்கள் பற்றி அதிகமாக பேசி இருப்பார். கொலை காட்சிகள் அதிகமாக இவரது படங்களில் இருக்கும். இந்த மாதிரியான  படங்களால் குற்றங்கள் அதிகமாகிறது என கூறி ரகுனாந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி க்ரைம் … Read more

ஜெயலலிதாவாக நித்யா மேனன்! சசிகலாவாக வரலெட்சுமி!! தி அயர்ன் லேடி !!!

தமிழக முன்னாள் முதல்வர் செல்லி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாறு  தற்போது பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தை மிஸ்கினின் பெண் உதவி இயக்குனர்  பிரியதர்ஷினி இயக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. இந்தபடத்தின் முதல்பார்வையை சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். DINASUVADU

பிரமாண்ட கூட்டணியுடன் சைக்கோவாக களமிறங்கும் மிஷ்கின்

தனது வித்தியாசமான படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிரமாண்ட கூட்டணியுடன் களமிறங்குகிறார். அந்த படத்தின் பெயர் சைக்கோ என வைத்துள்ளார். இதில் இளையராஜா இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் ராம், அதிதி ராவ் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதன் படபிடிப்பு இன்று முதல் துவங்க உள்ளது. DINASUVADU

துவங்கபடாத படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பா?!! : அப்படி என்ன படம் அது?!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்கை வரலாறு படமாகபோகிறது எனவும், அதனை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயகுக்க போகிறார் எனவும், அதற்க்கு கதாநாயகி தேர்வு நடைபெறுவதாகவும் சில செய்திகள் கிளம்பின. இந்நிலையில் இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினியும் இப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. இதற்கிடையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரும் இயக்குனர் லிஸ்டில் இடம்பெற்றது. அதில் நடிக்க திரிஷா, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா என முன்னணி  நடிகைகள் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை … Read more