மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்து வந்த சைக்கோ என்ன ஆனது?! படத்தின் புதிய தகவல்கள்!

வித்தியாசமான கட்சிகளும், தெளிவான வசனங்கள் எவருக்கும் புரியும்படி கதை கூறுவது என தனது படங்களில் முத்திரை பதித்தவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் சைக்கோ, இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆரபிக்கப்பட்டுள்ளது. இதனை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில், நான் ஒளிப்பதிவு செய்தது, இளையராஜா இசை கோர்ப்பு சேர்த்து பார்க்கையில் மிஷ்கினின் மேஜிக் காட்சியில் அருமையாக வந்துள்ளதாக தெரிவித்தார்.  இதன் மூலம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது தெரிகிறது. விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.