ஜெயலலிதாவாக நித்யா மேனன்! சசிகலாவாக வரலெட்சுமி!! தி அயர்ன் லேடி !!!

தமிழக முன்னாள் முதல்வர் செல்லி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாறு  தற்போது பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தை மிஸ்கினின் பெண் உதவி இயக்குனர்  பிரியதர்ஷினி இயக்க உள்ளார்.

இதில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது.

இந்தபடத்தின் முதல்பார்வையை சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment