தமிழ் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி.!?

அனுஷ்கா ஷெட்டி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக 2020-இல் வெளியான ‘சைலன்ஸ்’ படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த படம் குறித்து அறிவிப்பும் அனுஷ்கா  வெளியிடவில்லை. தற்போது, தமிழ் சினிமாவில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது, அதாவது, அனுஷ்கா தனது அடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. தகவலின்படி, இப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் … Read more

“வேலையில்லா பட்டதாரி ” அமுல்பேபியுடன் இணையும் விஜய் பட இயக்குநர்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ … Read more

ஆந்தலாஜி படத்திற்காக பிரபல இயக்குநருடன் இணைந்த மேகா ஆகாஷ்.!

மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், … Read more

தமிழ் பையன் Vs இங்கிலீஷ் பொண்ணு.! மதராசப்பட்டினம் குறித்த தகவலை பகிர்ந்த இயக்குநர்.!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற மதராசப்பட்டினம் படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டது பாலிவுட் நடிகை தான் என்று இயக்குநரான ஏ. எல். விஜய் கூறியுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மதராசப்பட்டினம். ஆர்யா மற்றும் எமி நடித்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ் பையனுக்கும், இங்கிலீஷ் பெண்ணுக்கும் இடையேயான காதலையும், சுதந்திரத்திற்கு முன்னுள்ள காலகட்டத்தையும் கூறும் இந்த … Read more

பிரபல நடிகையிடம் பணம் கேட்டு மிரட்டல்.! 4 இளைஞர்கள் கைது.!

பிரபல நடிகையான பூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2008ம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. அதனையடுத்து தமிழ் உட்பட பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று … Read more

தந்தையான தலைவா பட இயக்குநர்.!

தலைவா பட இயக்குநரான ஏ. எல். விஜய் அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல முன்னணி படங்களை இயக்கியவர் ஏ. எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளரான ஏ. எல். அழகப்பனின் மகன் மற்றும் நடிகர் உதயாவின் சகோதராவர். முதலில் இவர் பிரியதர்ஷன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். அதனையடுத்து தலயின் கீரிடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா உள்ளிட்ட … Read more

குயின், தலைவி படங்கள் வெளியாக எந்தவித தடையும் இல்லை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

குயின் (வெப் சீரிஸ்), தலைவி படங்கள் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திரபட்டிருந்தது.  மேற்கண்ட இரு படங்களும்  வெளியிட எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.  ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ் குயின் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவரும் எடுத்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் MX பிளேயரில் வெளியாக உள்ளது. அதே … Read more

ஜெயலலிதா வாழ்கை வரலாற்றில் நடிக்க மறுத்த முன்னணி ஹீரோ! அதிர்ச்சியில் படக்குழு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை கோலிவுட்டில் பலர் இயக்க உள்ளனர். இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது நடிகர்கள் தேர்வு முடித்து ஷூட்டிங் கிளம்பிவிட்டார். இந்த படத்திற்கு தலைவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அதற்காக அரவிந்த் சாமி மீசை, தாடி இல்லாமல் க்ளீன் ஷேவ் செய்து புது தோற்றத்தில் இருக்கிறார். இப்படத்தில் மறைந்த முன்னாள் … Read more

தடைகளை தாண்டி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தலைவி' உருவாக தொடங்கிவிட்டாள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று திரைப்படத்தினை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக அவரை பற்றிய பல்வேறு புத்தகங்கள், ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இப்படத்தை விஷ்ணு வரதன் கந்தூரி என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுத உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தினை தொடங்க கூடாது என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் விஷ்ணு வரதன், கௌதம் வாசுதேவ் … Read more

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு! தமிழ் மற்றும் ஹிந்தியில்…

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான வேலைகளை மும்பையில் செய்து வருகிறாராம் இயக்குனர். இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் தான் ஜெயலலிதாவாக நடிக்க உள்ளாராம். ஆதாலால் இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ரெடி ஆகிறதாம். ஹிந்தியில் ஜெயா எனும் பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் முதல் பாதியில் ஜெயலலிதாவின் இளமைக்காலம் உருவாக உள்ளதாம். ஆதலால் தற்போது … Read more