ஊரடங்கு தளர்வு – முதல்வர் பழனிசாமி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

மாநில அரசு அறிவிக்கும் வரை தற்போதைய உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தத நிலையில், தற்போது ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட … Read more

ஊழியர்களுக்கு சிறப்பூதியம் வழங்கவேண்டும் – முக ஸ்டாலின்

திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் காணொளி மூலம் தோழமைகட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு நிறைவேற்றம் செய்யப்பட்ட தீர்மானங்களை தெரிவித்தார். அதில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது என்றும் … Read more

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 10:30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து, காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றில், தமிழகம் … Read more

கொரோனா தடுப்பு : ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வருடனான ஆலோசனையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசப்படுவதாக தகவல் வந்துள்ளது. 

முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கிய முதல்வர்!

கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

கொரோனா குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காவது முறையாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கி  உள்ளது . கடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டது. இந்த ஆலோசனை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காலை  1 முதல் 9ஆம் … Read more

கொரோனா குறித்து முதல்வர் மீண்டும் ஆலோசனை கூட்டம்.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . கொரோனா முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே  தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. அரசு தரப்பில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் … Read more

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது…ஐபிஎல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம்…

கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற  29-ம் தேதி தொடங்கி மே 24 -ம் தேதி வரை நடைபெறுகிறது.மொத்தம் 9 மாநிலங்களில் 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரசால் இந்த வருட ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா ..?  என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வருவதால்  ஐபிஎல் போட்டிகளைக்காண மைதானங்களுக்கு ஆயிரக்கணக்கான  ரசிகர்கள் வருவார்கள் அதனால் கொரோனா வைரஸ் பரவவாய்ப்பு உள்ளதாக கூறி … Read more

மீண்டும் இன்று மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார் ரஜினி.!

ரஜினிகாந்த், மீண்டும் இன்று  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், இன்று  காலை இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.இதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கட்சி தொடங்குவது பற்றி ஓராண்டுக்கு பிறகு மாவட்ட செயலாளர்களை … Read more

இன்று ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று  (மார்ச் 9 ஆம் தேதி) மீண்டும் கூடுகிறது.கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.