பிரியா மரணம்.! அறுவை சிகிச்சைக்கு தணிக்கை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி.!

ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசினார். அதில் , பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த தவறு தவறு இனி நடக்காமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … Read more

முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த … Read more

கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்த வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசி அதிகமானோர் எடுத்து கொண்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்த அளவில் ஏற்படுகிறது. எனவே, தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரம்தோறும் தற்பொழுது சனிக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பூஸ்டர் … Read more

16-வது மெகா தடுப்பூசி முகாம்; 17 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, ஜனவரி 3-ம் தேதி போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் துவங்கி வைக்கிறார். 16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி … Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர். மா.சுப்பிரமணியன்!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மூவருக்கு கொரோன உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு வகையாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஓமைக்ரான் எனும் புதிய வகையாக உருமாறி பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலேயே வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை … Read more

மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

மெரினாவிலுள்ள நெறிக்குறவர்களுக்கு இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்  வெளியிட்டுள்ள பதிவில், மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் … Read more

செப்டம்பர் 30-க்குள் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியம்!

செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை நான்கு 4.43 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது இந்த மாத இறுதிக்குள் 5 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டு … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்த பள்ளிகளுக்கு சீல் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே பல்வேறு மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில் ஒரு சில மாணவர்களுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை சைதாப்பேட்டை … Read more

தமிழகத்தின் கையிருப்பில் தற்பொழுது 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தற்போது தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்பின், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பருப்பு, அரிசி, காய்கறி உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் மா.சுப்பிரமணியன் … Read more