முதல்வர் தொகுதியில் தவறான சிகிச்சை அளித்து மாணவி உயிரிழப்பு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.!

வீராங்கனை பிரியா சிகிச்சை பெற்ற பெரியார் அரசு மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிரிழந்துள்ளார். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ தவறான சிகிச்சையின் காரணமாக, தேசிய அளவில் விளையாட்டு வீராங்கனையாக இருந்த பிரியாவை நாம் இப்போது இழந்துள்ளோம். என வருத்தம் தெரிவித்தார்.

அதன் பிறகு, ‘ காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் பிரியா சென்றுள்ளார். அங்கிருந்து தான் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அந்த மருத்துவமனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் தான் இருக்கிறது. அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக  தான் பிரியாவின் உயிர் பிரிந்துள்ளளது.

இது குறித்து, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார் மேலும் , 1 கோடி நிதியை பிரியாவின் குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து உள்ளார்.

மருத்துவத்துறை அமைச்சர் பொறுப்பின்றி செயல்படுகிறார் . அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘தவறு செய்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.’ என பொறுப்பின்றி பதில் கூறுகிறார்.

பிரியாவுக்கு ஏற்பட்டது சாதாரண பிரச்சனை அதற்கு கூட சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் தான் மருத்துவத்துறை இருக்கிறது. இதற்கு யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment