#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் – தமிழக அரசு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 33 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையமும், தமிழக … Read more

2 தினங்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்- கே.எஸ்.அழகிரி..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை  கேட்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இடப்பங்கீடு குறித்து  தீவிரம் காட்டி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கிடையில்,  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது  இடப்பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது – தேர்தல் ஆணையம்

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்தார். இதன்பின் பேசிய அவர், சென்னைக்கு மட்டும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்படும் … Read more

#ELECTIONBREAKING: பிப்.19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகள் வெளியீடு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்பு தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. … Read more

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை…!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் நாளை மற்றும் 9-ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள 9 மாவட்ட … Read more

உள்ளாட்சி தேர்தல் : முதல்கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது…!

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் 5 மணியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்கள் கொட்டும் மழையையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனையடுத்து,  முதற்கட்ட ஊரக … Read more

#BREAKING: உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு ..!

உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை  தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை … Read more

#BREAKING: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி -விஜயகாந்த் அறிவிப்பு ..!

தேமுதிக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற … Read more

கூட்டணி கட்சியினருடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்- திமுக..!

உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று … Read more