2 தினங்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்- கே.எஸ்.அழகிரி..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை  கேட்போம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் இடப்பங்கீடு குறித்து  தீவிரம் காட்டி வருகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கிடையில்,  அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது  இடப்பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினேன். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 தினங்களில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் வார்டுகளை கேட்போம் என தெரிவித்தார்.

 

author avatar
murugan