சபரிமலையில் இன்று 5000 பக்தர்களுக்கு அனுமதி..!

சபரிமலையில் இன்று முதல் 2,000 பக்தர்களுக்கு பதிலாக 5,000 பேருக்கு அனுமதி. கொரோனா வைரஸ் காரணமாக சபரிமலையில் பல கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறு 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ம் தேதி இதற்கான புக்கிங் தொடங்கிய நிலையில் 2 மணி நேரத்தில் அனைத்து நாள்களுக்கான டிக்கெட்டு புக்கிங் செய்யப்பட்டது. இதனால், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள … Read more

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்.. ஒருவர் கைது!

யூசுப் வீடு அருகே தெரு நாய் ஒன்று அடிக்கடி குரைத்து கொண்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், எரிச்சல் அடைந்த யூசுப் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்த முயற்சி செய்தும், அந்த நாய் அந்த பகுதியில் இருந்து செல்லவில்லை. இதையடுத்து யூசுப் வேறு இடத்திற்கு கொண்டு விட முடிவு செய்தார். இந்நிலையில், அந்த நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, பின்னர் அந்த கயிற்றை காரின் பின் பகுதியில் கட்டிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். யூசுப்பின் இந்த … Read more

கேரளாவில் அரிய மலேரியா இனம் கண்டுபிடிப்பு – மாநில சுகாதார அமைச்சர் சைலஜா

சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் ஒரு அரிய மலேரியா இனம் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம்  மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டது. இந்த சிப்பாய் தற்போது கண்ணூரில்  உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். பிளாஸ்மோடியம் ஓவலே … Read more

கேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது!

புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புரேவி எனும் புயல் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் இன்று நண்பகல் நேரத்தில் பாம்பனுக்கு மிக அருகில் மையத்தில் இருக்கும் எனவும் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் சூறாவளி புயல் போல இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, … Read more

“டிசம்பர் 2-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

வருகின்ற டிசம்பர் 2ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதமாகும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற 36 மணி நேரமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என … Read more

எப்படியும் தங்களை பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் எடுத்த அதிரடி முடிவு!

தங்களை எப்படியும் பிரித்து விடுவார்கள் என்பதால் தோழிகள் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஆணுக்கு பெண் மீதும் காதல் அல்லது அன்பு ஏற்படும் என்பது தான் இயற்கை விதி. ஆனால் தற்போதைய காலங்களில் பெண்கள் பெண்கள் மீதும், ஆண்கள் ஆண்கள் மீதும் என்று ஒரே பாலினத்தவர் காதலிக்கின்றனர், அதிக அளவில் நேசிக்கின்றனர். சில இடங்களில் பெண் தோழிகள் மிக அதிக அளவில் தங்கள் தோழிகளுடன் அன்பை … Read more

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்..!

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல விளக்கு பூஜையினையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதன் பின் டிசம்பர் 27 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை … Read more

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் கேரளாவின் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் ரிசார்ட், ஹவுஸ் படகுகள் மற்றும் மலைப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம் கேரள தினமான இன்று முதல் கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி … Read more

கேரளாவின் 9 மாவட்டங்களில் நவம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 6,638 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 5,789 பேருக்கு உள்ளூர்ப் பரவல் மூலம் நோய்த் தொற்று பரவியுள்ளது.ஆனால் மீதமுள்ள 700 பேருக்குத் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் தெரியவில்லை. மேலும் கொரோனாவால் நேற்று மட்டுமே 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேராளாவின் 9 மாவட்டங்களில் ஊரடங்கு … Read more

தாத்தா பாட்டியிடம் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

தாத்தா பாட்டியிடம் கேரளாவில் வளர்ந்த மகளை வெளிநாடு அழைத்து செல்ல வந்த தாய், மகள் இறந்துவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி. ஜீஷா என்பவர் தனது கணவர் மற்றும் மகளுடன் பிரிட்டனில் வேலை காரணமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர் நான்கு வயது பெண் குழந்தையை கேரளாவில் இருக்கக்கூடிய குழந்தையின் தாத்தா பாட்டியுடன் விட்டு விட்டு இவர்கள் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். குழந்தையை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சில தினங்களுக்கு … Read more