கேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது!

கேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது!

புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புரேவி எனும் புயல் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் இன்று நண்பகல் நேரத்தில் பாம்பனுக்கு மிக அருகில் மையத்தில் இருக்கும் எனவும் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் சூறாவளி புயல் போல இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சிவகங்கை தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரிக்கு இடையே தெற்கு தமிழ்நாடு கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நிவாரண குழு மற்றும் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்தப் புரேவி புயலை கருத்தில் கொண்டு இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள பிரதமர் புயல் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் குறித்து அறிந்து உள்ளதாகவும், தமிழகத்துக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் தான் வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாசிக்க கூடியவர்கள் குடும்பம் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக தான் பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube