கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கேரளாவில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வாழ்ந்த பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற ஆண் நண்பர். கேரளாவில் உள்ள முவட்டுபுழா எனும் பகுதியை சேர்ந்தவர் தான் 30 வயதான பல் மருத்துவர் சோனா. இவருக்கு திருமணம் ஆகியிருந்தாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பதாகவே தனது கணவரை பிரிந்து விட்டார். இருப்பினும் தனது ஆண் நண்பர் மகேஷ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் சேர்ந்து டென்டல் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். வருமானம் நல்லபடியாக வந்தது, … Read more

சபரிமலை சந்நிதானம் இன்று திறப்பு..பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி.!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று சந்நிதானம் இன்று திறக்கப்படுகிறது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த ‘சபரிமலை ஐயப்பன் கோயில்’ நாளை முதல் ஐந்து நாள் மாதாந்திர பூஜைகளுக்கு திறக்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை கோயிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். ஆனால், மலையாள மாதமான ‘துலாம்’ முதல் நாளான நாளை காலை 5 மணி முதல் மட்டுமே பக்தர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று சன்னதியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், பக்தர்கள் எந்தவிதமான … Read more

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, இன்று கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசராகோடு மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தின் … Read more

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா! 144 தடை உத்தரவு அமல்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்,  8,135 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், 72,339 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மாநில … Read more

3 மாதங்களில் 350 படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்த கேரள பெண்மணி.!

கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள். கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் … Read more

இன்று பினராயி தலைமையில் கூடுகிறது-அனைத்துக்கட்சிக் கூட்டம்!

கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது  இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் … Read more

கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்று 6,477 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இரண்டாவது நாளாக இன்று ஒரே நாளில் 6 ஆயரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல், தினமும் 3 ஆயரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திம்புகிறார்கள். இன்று கொரோனாவிலிருந்து 3,481 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,11,331 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு … Read more

60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர்.!

கேரளாவில் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்க்களை வளர்த்து வரும் 70 வயதான முதியவர். கேரளாவின் கோட்டையத்தில் உள்ள 70 வயதான ஏழை முதியவர் 60 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வளர்த்து வருகிறார். ஒரு சாலை ஓரத்தில் சிறிய வீட்டில் ருக்மினியம்மா என்ற முதியவர், இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தானது மட்டுமில்லமால் அவை கடிக்கக்கூயது. ஆனால், “இருந்தாலும் அந்த நாய்களை வளர்த்து வருவது தாய்மையை காட்டுகிறது”. அவரது மகள் ஒரு பெட்ரோல் பம்பில் வேலை செய்து … Read more

போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் நேற்று தொடங்கப்பட்டது. போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்கி, கேரள அரசு நேற்று இ-செல்லான் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி உடனடியாக அபராதம் செலுத்த முடியும். இந்த புதிய முறையை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். இதனையடுத்து அவர் பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது முன்னதாக புகார்கள் வந்தது   … Read more

வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு…கேரளாவில் கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,   எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை … Read more