முதல் நாளிலேயே பிக் பாஸ் போட்ட தருமாறு கண்டிஷன்…அதிர்ந்து போன போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியா களைகட்ட தொடங்கிவிட்டது போல தெரிகிறது. ஆம்… முதல் நாளான இன்று இனிதே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிக் பாஸ் முதல் வாரத்திற்கான டாஸ்க்கை  வழங்கியுள்ளார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான தலைவராக பதவிக்கு பொறுப்பேற்றுள்ள விஜய் வர்மா கைகாட்டிய 6 போட்டியாளர்கள் இரண்டாவது வீட்டில் அனுப்பி வைக்கப்பட்டுள்னர். தற்பொழுது, வெளியாகியுள்ள இரண்டாம் ப்ரோமோவில், இரண்டாம் வீட்டிற்கு சென்றுள்ள 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் … Read more

முதல் நாளே ஆட்டம் ஆரம்பம்…வீட்டை இரண்டாக பிரித்த பிக் பாஸ்!

BiggBossTamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளே பிக் பாஸ் வீடு கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் வீட்க்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் கலந்துகொண்டுள்ளார். இவரை தவிர சீரியல் நடிகைகள் ரவீனா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, நடிகர் கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி, யூடியூபர் பூர்ணிமா ரவி, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். பிக் பாஸ் வீட்டின் … Read more

அட நம்ம சாக்லேட் பாயை கூட விட்டு வைக்கலையா? பிக் பாஸ் வீட்டில் காத்திருக்கும் ஆச்சரியம்!

bigg boss tamil 7 contestants

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 7 அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விஜய் தொலைக்காட்சி நிறுவனம் அடிக்கடி புதிரான ப்ரோமோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு  தொடங்கும். இதற்கிடையில், இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை மேலும் ஆச்சரியமடைய செய்துள்ளது. … Read more

#BharatJodoYatra: ராகுல் யாத்திரையில் பங்கேற்றார் கமல்ஹாசன்!

ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு. டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சமயத்தில், டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு இந்தியனாக பங்கேற்கவுள்ளேன் … Read more

கமல்ஹாசனின் மநீம மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை, கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயல்குழு, மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து … Read more

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.. வாழ்த்து தெரிவித்த ரஜினி, கமல்!

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து ட்வீட். சென்னை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். தமிழக அமைச்சரவையில், அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் … Read more

ம.நீ.மய்யத்தில் மீண்டும் இணைந்தார் அருணாச்சலம்!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சுற்றறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து … Read more

சாதி, மதம், இனம், மொழி கடந்து, மனிதம் நேசிக்கும் அனைவரும் உறுதியேற்போம் – மநீம

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் ட்வீட். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெய் … Read more

கமல்ஹாசனின் உடல்நிலைக்கு என்னதான் ஆயிற்று.? மருத்துவமனை கொடுத்த புதிய விளக்கம்….

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் விஸ்வநாத்தை சந்திக்க ஹைதராபாத்திற்கு சென்று அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மதியம் சென்னை திரும்பினார். ஹைதராபாத்தில் இருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பிய நிலையில், நேற்று உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மநீம தலைவர் கமல்ஹாசன்!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் வீடு திரும்பினார். ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், உடல்நல குறைவு காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் இன்று காலை … Read more