ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.., 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ..!

ஜம்மு காஷ்மீர் குல்காம் அருகே நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தின் சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில், இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அதேசமயம், முழுப் பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு, தேடல் நடவடிக்கையை  பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். சிம்மர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது, ​​பயங்கரவாதிகள் துப்பாக்கிச் … Read more

ஜம்முவில் மீண்டும் பறந்த 3 ட்ரோன்கள்…! தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள்…!

ஜம்முவில் மீண்டும் 3 ட்ரோன்கள் பறந்ததால், தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள். ஜம்முவில் செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலையில் மூன்று இடங்களில் ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்பினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, முதல் ட்ரோன் கலுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், இரண்டாவது ரத்னுச்சக் கன்டோன்மென்ட் பகுதியிலும், மூன்றாவது குஞ்ச்வானி பகுதியிலும் காணப்பட்டதாக கூறுகின்றனர்.இதனையடுத்து,  பாதுகாப்புப் படையினர் ஜம்முவின் சில பகுதிகளில் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், … Read more

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்…! காயமடைந்த ராணுவ வீரர்…!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில், பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவில் தாதல் கிராமத்தில் தேடுதல் வேட்டையின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகிலுள்ள கிராமம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், … Read more

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது – ப.சிதம்பரம்

காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஜம்மு காஷ்மீரில், டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அவரது இல்லத்தில் வைத்து, மோடி இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து … Read more

காஷ்மீர் தலைவர்களுடனான ஆலோசனை.., 5 கோரிக்கைகள் முன்வைப்பு -குலாம் நபி ஆசாத்..!

பிரதமர் தலைமையில் காஷ்மீர் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், … Read more

டெல்லியில் மோடி இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை…!

டெல்லியில் மோடி இல்லத்தில் ஜம்மு-காஷ்மீர் அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை. ஜம்மு காஷ்மீரில், டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அவரது இல்லத்தில் வைத்து, மோடி இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனான அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, … Read more

30 ஆண்டுகளாக தர்மம் எடுத்த பெண்ணின் வீட்டில் 2.60 லட்சம் பணம்!

30 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் தர்மம் எடுத்து வந்த பெண்ணின் குடிசையிலிருந்து 2.60 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நௌஷாரா மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குடிசையில் வசித்து வரக்கூடிய பெண்மணி ஒருவர் தர்மம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண்மணியை அழைத்து செல்வதற்காக நேற்று ரஜோரி மாவட்டத்தில் உள்ள முதியோர் காப்பக ஊழியர்கள் அவரது வீட்டிற்கு அப்பெண்மணியை அழைத்து செல்வதற்காக வந்துள்ளனர். மேலும்,  அவரது குடிசையிலிருந்து … Read more

#BigBreaking:முன்னாள் மத்திய அமைச்சரும்,பாஜக தலைவருமான சாமன் லால் குப்தா காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும்,பிஜேபியின் மூத்த தலைவருமான சாமன் லால் குப்தா உடல்நலக்குறைவால் காலமானார். பாஜகவின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான சாமன் லால் குப்தா,மே 5 ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக ஜம்முவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து,லால் குப்தா கொரோனாவிலிருந்து குணமடைந்து  ஞாயிற்றுக்கிழமை  மருத்துவமனையில் இருந்து காந்தி நகரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார். இந்நிலையில்,திடீரென்று உடல்நிலை மோசமாகி பாஜகவின் மூத்த … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி – ஜம்மு & காஷ்மீர் அரசு

ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு! இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் … Read more

2020-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 221 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை..!

2020-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர்  எல்லைகளில் பாதுகாப்பு படையினரால் 221 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ஜனவரி 29ம் தத்தி நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்து பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,  எல்லையில் நடந்த அத்துமீறல்கள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு போர் நிறுத்த … Read more