கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவி – ஜம்மு & காஷ்மீர் அரசு

ஜம்மு & காஷ்மீரில் பாமர மக்கள் பயனடையும் விதத்தில் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்கள் அன்பிற்குரிய உறவினர்களை இழந்து துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர், இதனையடுத்து துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு உதவ ஜம்மு & காஷ்மீர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதில் குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினரை கொரோனா தொற்றால் இழந்த மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும், மேலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்த உலகளாவிய தொற்றுநோய் தினசரி தொழிலாளர்களை வேலையில்லாமல் ஆக்கியுள்ள நேரத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்கள், போனிவாலாக்கள், பால்கிவாலாக்கள், பித்துவாலாக்கள் ஆகியோருக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாதம் ரூ .1000 வழங்க அரசு முடிவு செய்துள்ளது, மேலும் அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் ரேஷன் வழங்குவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.