ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, இந்த வழக்கை 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

விஜய் பேசிய வீடியோ 'மதுரவீரன்' படத்தில் வெளியீடு

கடந்த வருடம் தமிழக இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டேடுத்தனர். இதற்க்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அப்போது இளைய தளபதி விஜய் தனது ஆதரவை தெரிவித்ததுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அடுத்தவாரம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வெளிவரவிருக்கும் படம் மதுரவீரன். இப்படம் ஜல்லிகட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் பேசிய வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இது தளபதி ரசிகர்களை … Read more

கோவையில் முதல் முறையாக நடக்கிறது ஜல்லிகட்டு போட்டி

கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் முதல் முறையாக ஜல்லிகட்டு போட்டியானது இன்று நடக்கிறது. இந்த ஜல்லிகட்டு போட்டிக்காக மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.  

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…??

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் செல்வம் என்பவர் மனு அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை…!!

மதுரை : மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் மாடு பிடி வீரர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை காண்பிக்கலாம் .எனவே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆதார் தேவையில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு செய்துள்ளார்…

ஆதார் இல்லாவிட்டால் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதியில்லை…

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் இருந்தால் மட்டுமே மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க இயலும் என விழா கமிட்டி அறிவிப்பு செய்துள்ளது. ஏற்கனவே மத்தியரசு ஆதாரை கட்டாயப்படுத்தும் வேளையில் , ஜல்லிக்கட்டு விழாவில் அமல்படுத்தபடுவது வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது.  

அலங்காநல்லூர் ஜல்ல்லிகட்டு திருவிழா : இன்று கால்கோள் நடும் விழா

ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். source : dinasuvadu.com

ஒருகோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் அமோக விற்பனை

பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி மாட்டு சந்தை தருமபுரி மாவட்டத்தில் மாட்டு வியாபார சந்தை நடந்தது. இந்த சந்தை அரூர் அருகே உள்ள கொபிநாதம்பட்டி கூட்டு ரோட்டில் வாரசந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் சுமார் 1500 மாடுகள் விற்பனைக்கு வந்ததாகவும், அவை அனைத்தும் நல்ல விலைக்கு விற்பனையானதாகவும், இந்த சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் ஆனதாகவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். source : dinasuvadu.com

மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிப்பு!ஒரு மணி நேரம் நீட்டிப்பு……

  மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது .இந்நிலையில் சற்று முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைவர் தலைமையில் நடைபெற்றது .இறுதியாக இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நடைபெறும் தேதி அறிவித்துள்ளார்.மதுரையில் உள்ள  அவனியாபுரத்தில்   ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகின்றது .பாலமேட்டில்   ஜனவரி 15ஆம் தேதியும்,  அலங்காநல்லூரில்  ஜனவரி 16 ஆம் தேதியும் நடைபெறுகின்றது .அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் மதுரை ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு!மேலும் இந்த ஆண்டு ஒரு மணி … Read more

2018ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்…!

  இந்த 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள், அப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.