மதுரை ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது

Jallikattu reservation

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளும் பல மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடைபெறும். இதில் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரபலமானது என்றே சொல்லலாம். இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் … Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு!

madurai High Court

ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் … Read more

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிப் பெயர் கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

jallikattu madurai high court

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதியை குறிப்பிடக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதுரை மாநகரை சேர்ந்த … Read more

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தேதிகள் அறிவிப்பு – மதுரை மாவட்ட ஆட்சியர்!

jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் … Read more

சூரியூர் ஜல்லிக்கட்டு – மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு …!

திருச்சியிலுள்ள பெரியசூரியூரில் நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் பொழுது மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மதுரையில் உள்ள பாலமேடு மற்றும் திருச்சியில் உள்ள பெரிய சூரியூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரிய சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த … Read more

#Breaking:அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு தேதி மாற்றமா? – ஆட்சியர் ஆலோசனை!

ஜனவரி 16 ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால்,ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் கமிட்டியினருடன் இன்று மதியம் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தவுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது.மேலும்,ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை,மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கவுள்ளது எனவும்,அதன்படி,ஜல்லிக்கட்டு போட்டியில் … Read more

கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு – முதல்வர் ஆலோசனை!

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் ஆலோசனை. ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையாளர் இன்றி நடத்தலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பை தொடர்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் … Read more

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி – அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே அனுமதி என்று அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலப்பின மாடுகளுக்கு டோக்கன் வழங்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். மேலும், நாட்டுமாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.  

ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் விளைவாக அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து பீட்டா அமைப்பு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க மறுத்ததோடு, இந்த வழக்கை 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு – ஜனவரி 14ஆம் தேதி ஆரம்பம்…!

மதுரையில் மாவட்ட கலெக்டருடன் நடந்த சந்தித்தலில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்புகள் மற்றும் விதிமுறைகளை கலந்துரையாடினர். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதியும்,பாலமேட்டில் 15ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 16ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறியுள்ளார். இது காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். இதற்காக 500 காவலர்களும், 10 ஆம்புலன்ஸ், 3 தீ அணைப்பு படைகள் மற்றும் 10 மருத்துவ குழுக்கள் அமைக்க படும் என்று கூறியுள்ளனர். இப்போட்டியில் மொத்தம் 500 எருதுகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.