அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது!

Jallikattu - Madurai

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது உலக பிரசித்தி பெற்றவை. இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து … Read more

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எந்த இடத்தில் நடைபெறும்.? வெளியான முக்கிய அறிவிப்பு.!

Alanganallur Jallikattu

ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி … Read more

ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – ஆட்சியர் அறிவிப்பு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு முன்னதாக அரசாணையை வெளியிட்டது. இதில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தில் ஜனவரி 16-ஆம் தேதி முழு ஊரடங்கு என்பதால், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மாற்றுவது குறித்து விழா குழுவினருடன் இன்று ஆட்சியர் அனிஷ் சேகர் … Read more

களைகட்ட தொடங்கியது ஜல்லிக்கட்டு திருவிழா! மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுதி சோதனைகள் தீவிரம்!

இந்த வருடம் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  இன்று மாடுபிடி வீரர்களுக்கு தீவிர உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் 700 வீரர்கள் இதில்  கலந்துகொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகை தின விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரபலம். இந்த ஜல்லிக்கட்டு வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. … Read more

ஜல்லிக்கட்டை பார்க்க அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி வருகை?

ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் வெகுச்சிறப்பாக நடக்கும்.குறிப்பாக தமிழகத்தில் உள்ள பாலமேடு,அவனியாபுரம்,அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் படு சூப்பராக இருக்கும்.இதில் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயற்சிக்கும் வீரர்களை காண மக்கள் திரண்டு கண்டு ரசிப்பார்கள். மேலும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் காண ரஷ்ய அதிபரும், … Read more

அலங்காநல்லூர் ஜல்ல்லிகட்டு திருவிழா : இன்று கால்கோள் நடும் விழா

ஜல்லிக்கட்டு விளையாட்டுவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா வருகிற ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை காண தமிழகம் முழுவதிலிருந்து லட்சகணக்கான மக்கள் வருவார்கள். இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முதற்கட்ட வேலையாக இன்று கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விழாக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். source : dinasuvadu.com