#BREAKING: கொரோனா விதிமுறைகள் – கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தேர்தல் பரப்புரை, வாக்குபதிவின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தல் நடவடிக்கைகளின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தடுப்பு விதிகள் பற்றி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த … Read more

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கர் தலைவர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இதில் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, … Read more

தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க உத்தரவு.!

தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், நேற்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்திருந்தது. இதன் மீதான விசாரணையின் போது, தபால் வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு பிறகு, அடுத்து 24 மணிநேரத்திற்கு பிறகுதான் தபால் வாக்குகளை செலுத்துவோரின் வாக்குகளை பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் … Read more

தபால் வாக்கு – திமுகவின் அவசர வழக்கு நாளை விசாரணை.!

தேர்தல் ஆணையம் நடைமுறையை எதிர்த்து திமுக தொடர்ந்துள்ள அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனிகளும் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தபால் மூலம் வாக்களிப்போரின் பட்டியலை தொகுதிவாரியாக வழங்கக்கோரி திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தொகுதி வாரியாக தபால் … Read more

#BREAKING: திருச்சுழியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி ஆவியூர் என்ற கிராமத்தில் பணம், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது … Read more

ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு.!

தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு. தேர்தலன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடரப்படும் என அறிவிக்கை வெளியிடத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசிற்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊதியத்துடன் விடுமுறை வழங்கவில்லை என்று சேலம் அகமது ஷாஜகான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறி, வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏப்ரல் 4, 5, 6ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? – உயர்நீதிமன்றம்

வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு. வாக்காளரின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் … Read more

#BREAKING: கூட்டணி வேட்பாளர்களுக்கு சின்னம் தர தடையில்லை – உயர்நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்வதை தடுப்பது தற்போது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  திருச்செந்தூரை சேர்ந்த என்பவர் பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் நடைமுறை தொடர்கிறது. இது தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான சின்னங்கள் ஒதுக்கும் பணி நிறைவடைந்து … Read more

#BREAKING: கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.!

தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நேர்மையாக, நியாயமாக நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல், கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி போன்றவற்றை தடுப்பதை உறுதி செய்க என தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த … Read more