புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.!

புதுச்சேரி தேர்தலை ஏன் தள்ளி வைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளர்களின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைப்பதை தடுக்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. பாஜகவில் சேறுமாறும், வாக்களிக்குமாறும் குறுந்தகவல் வருவதாக புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கர் தலைவர் ஆனந்த் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதில் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம், வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்தது எப்படி? என்று கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் பதில் தர வேண்டும் என்று வழக்கை ஒத்துவைத்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாஜக மீதான புகாரை விசாரிக்கும் வரை ஏன் புதுச்சேரி தேர்தலை தள்ளிவைக்க கூடாது? என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்காளர் செல்போன் எண்கள் பாஜகவுக்கு எப்படி கிடைத்தது?, செல்போன் எண்கள் பாஜகவினருக்கு கிடைத்தது ஆதார் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்எம்எஸ் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக முன் அனுமதி பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றப்பிரிவு போலீசின் விசாரணை அறிக்கையை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உரிய விசாரணை இன்றி பாஜகவை நேரடியாக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் வேண்டு என்றால் விசாரணையை கண்காணிக்கலாம் எனவும் பதிலளித்ததை தொடர்ந்து ஆனந்த் தொடர்ந்த வழக்கை 31ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube