தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது.?  என்பது குறித்து வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கில்  வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி  100 சதவீத கல்வி கட்டணத்தை வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்த செப்டம்பர் 30க்கும் மேல் அவகாசம் நீட்டிப்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 100% கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்தித்ததாக பெற்றோர்களிடம் இருந்து வந்த 111 புகார்களில் … Read more

பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!

பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்கப்படும் என அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். உயர்நீதிமன்றத்தில் காணாமல் போன தங்கள் பத்தாம் வகுப்பு படித்துவந்த மகளை மீட்டு தரக்கோரி அவரது பெற்றோர்கள் கொடுத்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் என் கிருபாகரன், பி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது காணொலி காட்சி மூலம் மாணவியை ஆஜர்படுத்திய போலீசார் மாணவி ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், ஆடை தொழிற்சாலையில் … Read more

மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் நீதிபதி.!

மக்களிடம் மொழி அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார் உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையின் கலை லிங்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறுகையில், மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் செயல்பட்டு … Read more

அரியர் தேர்வு: நீதிமன்ற உத்தரவின்படி முடிவு – அமைச்சர் அன்பழகன்.!

நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இறுதி நாளான இன்று தமிழக சட்டபேரவையில், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்கள் இல்லையா என்று அரசு விளமளிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  நீதிமன்றம் உத்தரவின்படி அரியர் தேர்வு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அரியர் தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் தேர்வு எழுதவே தயாராக … Read more

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!

அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலை அறிவியல் மற்றும் பொறியியல் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து.!

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் பிரிவு 33-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. வரி உயர்வை எதிர்த்து பாமக நிர்வாகி தேவமணி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு முடியும் வரை குறைந்த அளவு மின்கட்டணம் வசூலிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்.!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக நூற்பாலைகள் மட்டும் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சென்னை உயர்நீதிமன்றம் போது, பொதுமுடக்கம் முடியும் வரை தொழிற்சாலையில் குறைந்த மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறியது. மேலும், ஊரடங்கு முடியும் வரை 20% கட்டணம் வசூலிக்க வேண்டும் எனும் கூடுதலாக வசூல் செய்த தொகையை வரும் மாதங்களின் கட்டணங்களில் சரிபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  கூறியது.

உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் – ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

உத்தரவை மீறி கடன் தவணை பெரும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு. கோபாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கடன் தவணை செலுத்த கூடிய கால அவகாசம் ஆகஸ்டு இறுதி வரை ரிசர்வ் வங்கியில் உள்ள போதும் அதை சில வங்கிகள் நடைமுறைப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார். வாங்கி கணக்கிலுள்ள பணத்தை ஒப்புதலின்றி பிடித்துக்கொள்வதாகவும், கடனை திருப்பி செலுத்த கோரி வங்கிகளும் நிதி … Read more

#BREAKING: மருத்துவ இடஒதுக்கீடு 27-ம் தேதி தீர்ப்பு – உயர்நீதிமன்றம் .!

மருத்துவ இடஒதுக்கீடு வழக்கு தீர்ப்பை ஜூலை 27-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை எனவும்  இடஒதுக்கீடும் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு சென்னை … Read more