மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் நீதிபதி.!

மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் நீதிபதி.!

மக்களிடம் மொழி அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார் உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையின் கலை லிங்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறுகையில், மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் செயல்பட்டு வரும் சில அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற முகமூடியை அணிந்திருக்கின்றன.

தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி முழக்கங்களை எழுப்பி சில அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்த பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன. 1967க்கு பின் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் ஆட்சிக்கு தமிழ் மொழியே காரணம். மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகளை திடமாக எதிர்க்க வேண்டும். மொழி பேரினவாதத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்றும் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில மொழிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube