ரயில்களில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண சலுகை…முதல்வர் கோரிக்கை…!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பலர் அனுப்பி வருகின்றனர். லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் இந்தப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரயில்களில் … Read more

தொடர் மழை காரணமாக தருமபுரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மழை காரணமாக தருமபுரியில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வந்தது.இதன் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் மழை காரணமாக தருமபுரியில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று  மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கண்ணீர் கலந்த வேண்டுகோள்…!நிதி மக்களை சென்றடையும் வரை திமுகவினர் களப்பணியில் ஈடுபட வேண்டும்…!மு.க.ஸ்டாலின்

புயலால் பாதித்த மக்களை  அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும். அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பது குற்றச்சாட்டு அல்ல. கண்ணீர் கலந்த வேண்டுகோள் மத்திய, மாநில அரசுகளின் நிதி மக்களை சென்றடையும் வரை திமுகவினர் களப்பணியில் ஈடுபட வேண்டும் என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் களத்தில் தான் பணியாற்றுகிறோம் …!அமைச்சர் விஜயபாஸ்கர்

பகல் நேரத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் களத்தில் தான் பணியாற்றுகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  பகல் நேரத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் களத்தில் தான் பணியாற்றுகிறோம், ஆய்வு கூட்டம் இரவில் தான் நடைபெறுகிறது.மழை காரணமாக சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சிரமத்திற்கு இடையிலும் மின் ஊழியர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று  நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று  (நவம்பர் 24 ஆம் தேதி) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் … Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை …!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வந்தடைந்தது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது .மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது. நாளை தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய உள்ளது மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான குழு.

கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை …!

கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. தொடர்மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர் மழை எதிரொலி …! தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை …!

மழை காரணமாக தருமபுரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,  நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, நாமக்கல்லில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்தது. ஆனால்  தருமபுரியில் தொடர் மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில் மழை காரணமாக தருமபுரியில் … Read more

3 மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.!

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை  நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. தமிழகத்தை மிரட்டி சென்ற கஜா தனது கோரத்தை காண்பித்து 4 மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுழன்று சூறைக்காற்றால் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் வீடுகள்,கால்நடைகள்,மனித உயிரிகளும் மற்றும் மரங்களும் பலத்த சேதமடைந்தது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (நவம்பர் 24 ஆம் தேதி) நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக … Read more

அசத்திய அதிமுக…நிவாரணம் உதவிக்கு புதிய இணையதளம்….!!

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. www.gajacyclonerelief.com என்ற இணையதளத்தை அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை இந்த இணையதளத்தில் பதிவிட்டால், உதவ முன்வருபவர்கள் இணையதளத்தில், தான் உதவுகிறேன் என வேண்டுகோளை ஏற்று உடனடியாக நிவாரணம் கிடைக்க வகை செய்யலாம். மேலும் நிவாரண உதவி செய்வோரின் பெயரும், கைபேசி எண்ணும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும் … Read more