கஜா புயல் :இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி..! முதல்வரிடம் வழங்கப்பட்டது…!

கஜா புயல் தமிழகத்தில் 8 மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது.இன்னும் மக்களுக்கும் முழுமையான அடிப்படை வசதிகள் சென்றடைய வில்லை,பல பகுதிகளில் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.அவர்களுக்கு பொதுமக்களும் , நடிகர்களும் ,அரசியல் தலைவர்களும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். மேலும் இருக்க இருப்பிடமின்றி சிலர் சூடுகாட்டில் தங்கி அங்கேயே சமைத்து உறங்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது. இப்படி டெல்டாவே சுக்கு நூறாக நொருங்கி கிடக்கும் வேளையில் கஜா புயல் நிவாரண நிதியாக பலரும் முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு … Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 9.64 லட்சம் பேருக்கு சிகிச்சை…! அமைச்சர் விஜயபாஸ்கர்

தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 14,678 மருத்துவ முகாம்கள் மூலம் 9.64 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பும் வரை போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடரும்.தொற்றுநோய் தடுப்பு  நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் கடந்த 19 நாட்களாக நடைபெறுகிறது  என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை ….!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலை உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, கோட்டூர், … Read more

IND VS AUS T20:சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கஜாவை உலகறிய செய்த தமிழ் உறவுகள்..!!!

ஆஸ்தெரேலியா சிட்னி மைதானத்தில்  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் 3-வது டி-20 போட்டியை காண  ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்திற்கு வந்த ரசிகர்களில் சிலர் “Save Delta மற்றும் Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” என்ற எழுதப்பட்ட பதாகைகளை கையில் … Read more