பட்டாசு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் … Read more

விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் கோடி – பிரதமர் மோடி

விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு. குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் இடையே காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த 60 லட்சம் … Read more

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!

வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் உள்ளதால் உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 20.04.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது என  முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளரும் தெரிவித்தனர். 2021-2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மறு அறிவிப்பு வரை அனைத்து விலங்கியல் … Read more

“தமிழகத்தில் இந்த திட்டத்திற்கு,வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு” – எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று … Read more

தேசிய கொடி நாள்: “மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம்” – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை:முப்படை வீரர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடி நாளான இன்று கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிக்க வேண்டும் என்று மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் … Read more

“அதிகரித்த சேதம்;கூடுதல் இழப்பீடு தர வேண்டும்” – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் !

தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட  பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல … Read more

வீரமரணமடைந்த 4 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கிய முதல்வர் மு.ஸ்டாலின்…!

ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். மதுரையை சேர்ந்த பாலமுருகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், குமரியை சேர்ந்த ஆனந்த், திருப்பத்தூரை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 4 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.

தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு!!

வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு இதுவரை ரூ.734.67 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு. 15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது. இதில் நான்காவது … Read more

மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல. இதனிடையே, புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை … Read more

உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு … Read more