வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிக்கு ஆட்டோவிலேயே பிரசவம் பார்த்த பெண் காவலர்கள்..!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி சென்று கொண்டிருந்த ஆட்டோவிலேயே பிரசவம் பார்க்க இரண்டு பெண் காவலர்கள் உதவியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள போபாலை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்த காரணத்தால் ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியதால் அதன் பின்னர் நகரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்துள்ளது. அப்பகுதியில் இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த இரண்டு பெண் காவலர்கள் ஆட்டோவை … Read more

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்…! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்…!

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீரர்கள்.  பல மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்று இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் படையினரின் படகின் மீது மரம் சாய்ந்ததில் எஞ்சின் பழுதானது. இதனால் … Read more

ராஜஸ்தானில் மழை வெள்ளத்தால் இடிந்து விழுந்த சுவர் – இருவர் பலி!

ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள கேஷோரைபட்டான் பகுதியில் இன்று காலை மழை வெள்ளத்தால் அதிக அளவில் நனைந்த … Read more

ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழப்பு..!

ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காம்திஷ் என்ற பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவில் ஏற்பட்ட இந்த கடுமையான வெள்ளத்தில் 80 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த மீட்பு படையினர், 80 வீடுகள் அடித்து … Read more

இமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தலைமைச் செயலாளர் அனில் குமார் காச்சி கூறினார், மேலும் மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை தேடிவருவதாகவும் தெரிவித்தார்.இந்த பதினான்கு பேரில் லஹாலில் பத்து பேரும், குலுவில் நான்கு பேரும் இறந்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மோசமான வானிலை ஐஎம்டி கணித்துள்ளதால் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 14 people … Read more

கனமழையால் டெல்லி சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி!

கனமழை காரணமாக டெல்லி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை கனமழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதான், தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலையில் வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக … Read more

மகாராஷ்டிரா : வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழப்பு…!

மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 149 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் காணாமல் போயுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், பல இடங்களில் இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். … Read more

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மகாராஷ்டிரா முதல்வர் நேரில் ஆய்வு!

மகாராஷ்டிராவில் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியான ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. எனவே பல இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த … Read more

68.50 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்..!மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் … Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா-25 பேர் உயிரிழப்பு..!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள் கிழமை அன்று அதீத கனமழை பெய்துள்ளது. இதனால் இம்மாகாணத்தின் தலைநகரான ஜெங்கோ வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வானிலை மைய அறிவிப்பின்படி, கடந்த மூன்று தினங்களில் இங்கு 640 மி.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நகரின் போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more