68.50 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்..!மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து தற்போது 68.50 அடியாக இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  வைகை அணை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அணை மூலமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் தங்களின் குடிநீர் தேவையையும், பாசனத்தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடியாகும். தற்போது இந்த அணையில் 68.50 அடி நீர் வரத்து இருப்பதால் … Read more

வீட்டிலேயே இருந்தால் பிரிட்ஜ், பீரோ, குக்கர் பரிசு.! எந்த ஊரில் தெரியுமா?!

கொரோனா பாதிப்பு காரணமாகா நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, அரசின் நலதிட்டங்கள் பெற என உரிய காரணங்களோடு வெளியே வருகின்றனர். இத்தனையும் கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.  இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக பிரிட்ஜ், இரண்டாம் … Read more

அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய்..!!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் பசுமை குடில் அமைத்து அதிக மகசூல் தரும் நெதர்லாந்து மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் குறைவான தண்ணீர் மூலம், பசுமை குடில் அமைத்து பல வகையான காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இங்கு நவீன முறையில் பசுமைக்குடில் அமைத்து, முதன்முறையாக நெதர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹாட் பெப்பர் எனப்படும் ஒருவகை பச்சை மிளகாயை வளர்க்கின்றனர். … Read more

குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை தொடக்கி வைத்த தமிழக முதல்வர்..!!

பல்வேறு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதோடு கூடுதலாக 36 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபங்கள், ஓய்வுக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர்  திட்டத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் துவக்கி வைத்தார்.

மருத்துவ கழிவை கொண்டுவந்த லாரி சிறைபிடிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்ததாக லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்தூரில் சில தினங்களாக லாரிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து இத்தகைய கழிவுகளை ஏற்றிவந்த லாரி ஒன்றை அவர்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது … Read more

“தினகரன் முதல்வர் பதவிக்கு ஆசைபட்டார்” அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த தினம் மற்றும் இலங்கை தமிழர்களை இனப் படுகொலை செய்ய உதவிய காங்கிரஸ் மற்றும் திமுக மத்திய கூட்டணி அரசைக் கண்டித்து கண்டன பொது கூட்டம்  திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு  சீனிவாசன் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் TTV.தினகரன் முதல்வர் பதவி புடிக்க ஆசைப்பட்டார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர் , லண்டன் காபிபோசா வழக்கில் கருணாநிதியிடம் பிச்சையெடுத்து தப்பித்துக்கொண்டு அம்மாவை பொய் வழக்கில் … Read more

வாட்ஸ் ஆப்பில் மிரட்டிய” புல்லட்டை” போட்டு தாக்கிய போலிஸ்..!!!

பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி குரல் பதிவு வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ், தன்னை காவல்துறையால் பிடிக்க முடியாது என்று சவால் விட்டான். அவனை பிடிக்க தனிப்படை காவல துறையினர் அவனது செல்போன் நம்பர் மூலம் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். வத்தலகுண்டுவில் உள்ள தங்கும் … Read more

பட்டாசு வெடித்து இருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சக்கிலியன்கொடை கிராமத்தில் உள்ள வேட்டைக்கார சுவாமி கோயிலில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. வானவேடிக்கை நிகழ்ச்சிக்காக ஏராளமான அதிநவீன பட்டாசுகள் வாங்கி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. கணேசன்,செல்வராஜ் இருவரும் பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வைத்திருந்த பெட்டிகள் மீது  தீப்பொறி, விழுந்தன. இதனால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதில் கணேசன், செல்வராஜ் இருவரும் உடல் சிதறி பலியாகினர்.இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு … Read more