கொரோனா கட்டுப்பாடு…! தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் ரத்து…!

தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தற்போது அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளதால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி  திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், தஞ்சையில் பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெகு விமர்சையாக நடைபெறும், இந்த விழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் … Read more

போகி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? வாங்க பார்க்கலாம்!

போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளுக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை ஜனவரி 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் சில வருடங்களில் 14-ஆம் தேதியிலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை  தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. … Read more

கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.  கிறிஸ்துமஸ் என்பது அன்பை பகிர்ந்து கொள்வது தான். மற்றவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்ப்பது தான் கிறிஸ்துமஸ். இருப்பவர்கள் இல்லாதவர்களோடு தங்களால் இயன்றவரை பகிர்ந்து கொடுத்து மகிழ்வது தான் கிறிஸ்துமஸ். இவ்வாறு தங்களால் இயன்ற உதவியை செய்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். டிச.25ம் தேதி தான் கிறிஸ்து பிறந்தார் என்று சொல்லமுடியாது. இந்த … Read more

வீடுகளில் ஒளிரும் விளக்குகள்! களைகட்டும் கார்த்திகை தீபத்திருநாள்!

இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று வீடுகள் தோறும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். அன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், பீங்கான்  மற்றும் கண்ணாடி போன்ற அகல்விளக்குகளை  வாங்கி, அவற்றுள் நெய் அல்லது எண்ணெய்  விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர். இதனை வீடுகளின் வாசற்படிகள், ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் முற்றங்களில் வைத்து அலங்கரிப்பார்கள்.  வீடுகளில் மட்டும் விளக்கேற்றாமல் அலுவலகங்கள், … Read more

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  கூறுகையில், திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து … Read more

பண்டிகை தினத்தையொட்டி 6 சிறப்பு ரயில்கள்..டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 26 மற்றும் நவம்பர் 2,9,16,20,23 ஆகிய நாட்களில் காந்திதாமில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியில் அடுத்த 3 தினங்களில் வந்தடையும். அதனையடுத்து நவ.5, 12, 19, 26 மற்றும் டிச.3 ஆகிய தினங்களில் திருநெல்வேலியில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த 3 … Read more

பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!

தீபாவளி, தசரா பண்டிகைகளை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு சிறப்பு ரயில் இயக்கபடும் என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரில் இருந்து தமிழகத்திற்கு சென்னை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் வருகின்ற அக்டோபர் 24 முதல் டிசம்பர் 1 வரை வண்டி எண் 06235 மற்றும் வண்டி எண் 06236 மைசூரு – தூத்துக்குடி அக்டோபர் 23 முதல் நவம்பர் … Read more

பண்டிகை காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவது, போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என … Read more

196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – இந்திய ரயில்வே 

டெல்லியில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 196 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 39 ஜோடி ஏசி சிறப்பு ரயில்களின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ரயில்வே அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. திருவிழா சிறப்பு ரயில்களில் 392 (196 ஜோடிகள்) வருகின்ற அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்படும். இந்த சேவைகளுக்கு பொருந்தும் கட்டணம் சிறப்பு ரயில்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி குலசை தசரா திருவிழா..நாளொன்றுக்கு 8,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!

தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை தசரா திருவிழா கொடியேற்றம் வருகின்ற 17 ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17-ம் தேதி தொடங்குகின்ற திருவிழா 27-ம் தேதி நிறைவடைகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அதிகமான மக்கள் கூடுவதை கருத்தில் கொண்டு வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், தசரா … Read more