திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  கூறுகையில், திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து வாரங்களாக கொரோனா பாதிப்பின் தினசரி புதிய இறப்புகளில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா  ஆகிய மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில், 58 சதவிகிதம், புதிய இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.