குரூப்-2 தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல – டிஎன்பிஎஸ்சி

குரூப் 2,2ஏ தேர்வில் எந்த கேள்வியோ, ஆப்ஷன்களோ, மொழிபெயர்ப்போ தவறானவை அல்ல டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.  தமிழகத்தில் 5529 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும், பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,  நேற்று குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி  தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2 / 2A தேர்வுகள் 4,012 தேர்வு … Read more

#JustNow: குரூப் 2, 2ஏ தேர்வு; 1,83,285 பேர் ஆப்சென்ட் – TNPSC அறிவிப்பு

இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை என TNPSC தலைவர் தகவல். தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு எவ்வித தடைகளுமின்றி மே 5ந் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6ந் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் கடந்த 10ந் தேதி பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஜூன் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் … Read more

1.18 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாதது ஏன்…? – பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்

கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாததற்கு காரணம்.  கடந்த வாரம் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வை 1.18 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. 1.18 லட்சம் மாணவர்கள் பொது தேர்வு ஏன் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் ஏற்பட்ட சமூக- பொருளாதார நெருக்கடியே மாணவர்கள் பங்கேற்காததற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தை திருமணம், ஐடிஐ, பாலிடெக்னீக் படிப்புகளில் … Read more

எமது கோரிக்கை வெற்றி – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி துறை, கடந்த ஆண்டு தமிழகத்தில் தேர்வு மையம் அறிவிக்காமல் பெங்களூருவில் அறிவித்தது. இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி துறை எரிபொருள் வளாகம் தலைமை நிர்வாக அலுவலர் திருமிகு டாக்டர் ஆர். … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை – பள்ளிக் கல்வித்துறை

9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை.  தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 9,55,139 … Read more

#BREAKING : மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – கோடை விடுமுறை அறிவிப்பு…!

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் மே 14 … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்…? உங்களுக்காக தான் இந்த பதிவு..!

தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், எதை செய்ய வேண்டும். தமிழகத்தில் நாளை பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே ஒரு பதட்டமான சூழல் காணப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு நடைபெறாத நிலையில் தற்போது தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  பயம்,பதற்றத்தை … Read more

பொதுத்தேர்வு – இவர்களுக்கு மாஸ்க் கட்டாயமில்லை : சுகாதாரத்துறை

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதும் போது, முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அறிவிப்பு.  தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பொதுத்தேர்வில் போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று இரவு 12 மணியுடன் நிறைவு..!

குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20,53,837 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தமிழகத்தில் பல்வேறு  துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் 29ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள், குரூப்-4 தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த தேர்வுக்கு மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் … Read more