பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : 42,024 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை – பள்ளிக் கல்வித்துறை

9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை. 

தமிழகத்தில் கொரோனா சூழல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால்,8.22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில்,32,674 மாணவர்கள் நேற்று ஆப்சென்ட் என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 9,55,139 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத பதிவு செய்திருந்த நிலையில், இன்றைய மொழிப்பாட தேர்வில் 42,024 மாணவர்கள் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், 42,024 மாணவர்கள் ஏன் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என்று விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.