நான் கொண்ட காதல்., அதையும் தாண்டி புனிதமானது..! தீவிர பிரச்சாரத்தில் கமல்…

Durai Vaiko - Kamalhaasan

Kamal Haasan : நான் மக்கள் மீது கொண்ட காதல் சாதாரணமானது அல்ல, அதையும் தாண்டி புனிதமானது என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் வரவுள்ளதால், அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று … Read more

செத்தாலும் எங்கள் சின்னம் தான்! உணர்ச்சிவசப்பட்ட துரை வைகோ

Durai Vaiko: செத்தாலும் எனக்கு எங்கள் சின்னம் தான் என மதிமுக திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் துரை வைகோ பேச்சு. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக, மதிமுக சார்பில் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய துரைவைகோ, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு … Read more

ஒரு கட்டத்தில் நக்சலைட் ஆகிவிடலாம் என்று எண்ணினேன் – துரை வைகோ

அப்பாவின் பெலவீனம் மற்றும் இயக்க தோழர்களின் வற்புறுத்தலால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என துறை வைகோ பேச்சு.  மதிமுக தலைமை நிலைய செயலாளர் துறை வைகோ கோவையில் ஒரு நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு 3 வருடத்திற்குமுன்னதாக நான் அரசியலுக்கு வருவேன் என யாரவது சொல்லியிருந்தாலும், நானும் எனது அப்பாவும் அவர்களை பைத்தியக்காரன் என்று தான் சொல்லியிருப்போம். ஏன்னென்றால் எனக்கு அரசியல், அரசியல்வாதிகள் யாரையும் பிடிக்காது. அதிகார வர்க்கத்தினரை அனைவரையும் எதிர்த்தவன் நான். ஒரு … Read more

அண்ணாமலை பதவியில் நீடிக்கவே திமுக மீது விமர்சனம்- துரை வைகோ

திமுகவை எதிர்க்கவில்லை எனில் அண்ணாமலை தனது பதவியில் நீடிக்க முடியாது என துரை வைகோ தெரிவித்தார். மதுரையில் மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திமுகவை எதிர்க்கவில்லை எனில் அண்ணாமலை தனது பதவியில் நீடிக்க முடியாது. அண்ணாமலை பதவியில் நீடிக்கவே திமுக மீது விமர்சனம் வைக்கிறார்.10 மாதங்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறார். முதல்அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை பாஜக கொச்சைப்படுத்திப் பேசி வருகிறது. திமுக ஆட்சியில் பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் … Read more

மதிமுகவில் தலைமைச்செயலாளர் துரை வைகோவுக்கு என்னென்ன பணிகள்? – வைகோ அறிவிப்பு!

தமிழகம்:மதிமுக கட்சியின் தலைமைச்செயலாளர் துரை வைகோ அவர்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள்,அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில்,துரை வைகோவுக்கு பெரும்பான்மையான வாக்கு கிடைத்தது.இதனால்,மதிமுக தலைமை கழக செயலாளராக தனது மகன் … Read more