தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

rain

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் திண்டுக்கல், … Read more

இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்… என்னென்ன ஆவணங்கள் தேவை?

voter special camp

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தீப திருவிழா காரணமாகதிருவண்ணாமலையில் மட்டும் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024-ஐ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய … Read more

தமிழகம் மீண்டும் முதலிடம்..! கருத்துக்கணிப்பில் முதலிடம்..!

இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம்.  இந்தியா டுடே நடத்திய ஆய்வில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில், 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், நிர்வாகம் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

உருமாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுவதால், நவம்பர் 20 முதல் 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது.  தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதோடு, வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலமாகவும், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய … Read more

இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்..!

பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர்.  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் அகதிகள் … Read more

விளையாட்டிலும் பாரபட்சம்; இந்த ஓரவஞ்சனை நியாயமா? – மநீம

விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழகத்துக்கு மிகக் குறைந்த நிதியையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என மநீம அறிக்கை.  கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை நிதி ஒதுக்கியுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் 33 மாநிலங்களுக்கு 2754.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மத்திய விளையாட்டு துறை தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அதன்படி, தமிழகத்திற்கு ரூ.33 … Read more

குட்நியூஸ்..!தமிழகத்தில் தக்காளி விலை குறைந்துள்ளது!

தமிழகத்தில் ஆப்பிளுக்கு இணையாக விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ரூ.30 அளவில் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும்.ஏனெனில், தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து பல பகுதிகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால்,கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் … Read more

#Breaking:இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.குறிப்பாக, சென்னையில் இன்று காலை முதலே செல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர புதுச்சேரி,காரைக்கலில் இன்று மிதமான … Read more

“10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களே….நாளை முதல் இதற்கு பதிவு செய்யலாம்” – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கு நாளை முதல் பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் (முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி … Read more

மதிமுகவில் தலைமைச்செயலாளர் துரை வைகோவுக்கு என்னென்ன பணிகள்? – வைகோ அறிவிப்பு!

தமிழகம்:மதிமுக கட்சியின் தலைமைச்செயலாளர் துரை வைகோ அவர்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் தலைமையில்,கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள்,அரசியல் ஆலோசனைக் குழு,அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலையச் செயலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது,கட்சியின் நிர்வாகிகளிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.அதில்,துரை வைகோவுக்கு பெரும்பான்மையான வாக்கு கிடைத்தது.இதனால்,மதிமுக தலைமை கழக செயலாளராக தனது மகன் … Read more