குற்றாலம் அருவிகளில் டிசம்பர் 31ம் தேதி முதல் குளிக்கத்தடை..!

குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புத்தாண்டு விடுமுறைக்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்…!

கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கேரள அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கானது இரவு … Read more

#BREAKING: இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்..! 

இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் கான்பூர் பயணம் -பிரதமர் அலுவலகம் அறிவிப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காகவும், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. PM Narendra Modi … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு..!

கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி புதிய உத்தரவு. தனியார் மருத்துமனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் எக்காரணத்தை கொண்டும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற பரிந்துரை வழங்க கூடாது. தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தனிமைப்படுத்தல் காலகட்டத்திற்கு முன்பாகவே வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறைக்கு கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் … Read more

காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – ஐஜிபி விஜய் குமார்..!

அவந்திபோரா டிரால் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும்,  பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்தார். இன்று காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுகிய முட்டை – தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

கரூரில் சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து 3 பேர் சஸ்பெண்ட் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் மதிய உணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் நாகனுரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டைகள் அழுகி அதில் புழுக்கள் இருந்தததும், முட்டையில் ஒரு வித துர்நாற்றம் வீசியதையும் அடுத்து புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து சத்துணவு … Read more

சோனியா காந்தியை சந்திக்கும் பஞ்சாப் மக்களவை எம்.பி.க்கள்..!

பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சோனியா காந்தியை சந்திக்கிறார்.  இன்று மாலை 6.30 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி  டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பஞ்சாப் மாநில மக்களவை எம்.பி.க்கள் சந்திக்கிறார். காங்கிரஸின் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கூட்டம் பின்னர் பேசிய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி சீட்டு வழங்க முடிவு செய்தது. இன்றைய கூட்டத்தில் 117 … Read more

ஓமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் அனைத்து பள்ளிகளும் மூடக்கூடும்..!

ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். “நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மகாராஷ்டிராவில் இதுவரை 54 பேர்  ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

#BREAKING: கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்..!

முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக  பணிபுரிந்து சண்முகநாதன் பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன் கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை … Read more