முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழல்” சண்முகநாதனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

சென்னை:முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளரான சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த சண்முகநாதன் அவர்கள் மீது கொண்ட அதீத பாசத்தால்,நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில்,மீண்டும் … Read more

மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும் – உதயநிதி ஸ்டாலின்

முத்தமிழறிஞரின் இறப்புக்கு பிறகும் அவரின் எழுத்தைத் தொகுக்கும் பணியில் அயராது ஈடுபட்டிருந்த மாமா அவர்களின் உழைப்பு என்றென்றும் போற்றப்படும். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் … Read more

அந்தோ..! சண்முகநாதன் மறைந்துவிட்டாரே..! – கீ.வீரமணி

சண்முகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஆசிரியர் கே.வீரமணி. முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தனிச் சிறப்பு மிக்க உதவியாளராக அரும் பணியாற்றிய அருமைத் தோழர் … Read more

#BREAKING: கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்..!

முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன்  உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். காவல்துறையில் சுருக்கெழுத்தாளராக  பணிபுரிந்து சண்முகநாதன் பின்னர் கலைஞரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன் கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார். கலைஞர் முதலமைச்சராக இல்லாத போதும் அவரது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை … Read more