கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறப்பு.!

கர்நாடகாவில் நவ.,17 முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி முதல் கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் வர கட்டாயப்படுத்த கூடாது என்றும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

வரவு குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரிப்பு.!

வரவு குறைவு காரணமாக வெங்காய விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே, நாளுக்கு நாள் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெண்கள் முற்றிலும் கவலையில் உள்ளனர். தற்போது, சேலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய் முதல் 130 ரூபாய் … Read more

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான முதல் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்தில் உள்ள … Read more

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக திரைப்படத் துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பல படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து பேசிய விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையரங்குகளை திறக்கும் போது அப்போது நிலவும் சூழலை பொறுத்து தான் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை … Read more

எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.27 தொடக்கம்.!

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 15% எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் தமிழகத்தில் 547 எம்பிபிஎஸ் இடங்களும், 15 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அந்த இடங்களின்‌ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்தவுள்ளனர். \வரும் 27-ம் தேதி முதல் நவ. 2-ம் தேதி மாலை 5 மணி வரை … Read more

இன்றைய பங்கு சந்தை நிலவரம்.!

இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று பெரும் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் 228.56 புள்ளிகள் அதிகரித்து 40,787.05 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 70.70 புள்ளிகள் உயர்ந்து 11,967.15 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்தை தொடங்கியுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!

டெல்லியில் பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார் அளித்துள்ளார். டெல்லியின் சராய் காலே கான் பகுதியில் 16 வயது சிறுமி தனது பக்கத்து வீட்டு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது … Read more

கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது..!

பெங்களூரில் 10 கிலோ கிராம்கஞ்சா விற்ற டெலிவரி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள கலாசிபல்யா பஸ் ஸ்டாண்ட் அருகே 8 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கிராம் கஞ்சாவை விற்க முயன்றதாக இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 20 வயது டெலிவரி இளைஞரை பெங்களூரு போலீசார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகை,கடலூர் துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!

நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதை அடுத்து நாகை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை.!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்தும் அதிகரித்து கொண்டும் வருகிறது. அந்த வகையில், இன்றைய மாலை நேரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4720 -க்கும், சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.37760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,098 -க்கும், சவரனுக்கு ரூ.40784-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.67.20-க்கு விற்பனையாகிறது.