நடிகை விஜயலட்சுமி மீது புகார்.! காரணம் என்ன தெரியுமா.?

தனியார் விடுதி உரிமையாளர் ஒருவர், நடிகை விஜயலட்சுமியின் மீது சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதாவது, நடிகை விஜயலட்சுமி கடந்த 8 மாதமாக அந்த தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். ஆனால், அவர் அதற்கான வாடகையான ரூ.3 லட்சத்தை இன்னும் தரவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். தற்போது அதற்கான விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

தமிழ் உணர்வை விட மனிதநேயம் மேலானது.! விஜய் சேதுபதி மகளின் மிரட்டல் விவகாரம் குறித்து ராஜ்கிரண்.!

நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததை கண்டித்து நடிகர் ராஜ்கிரண் கூறியதாவது, தமிழ் உணர்வும், நல்ல பண்புமுடைய அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு இப்பொழுது, அதிலிருந்து விலகிய சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று,வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக … Read more

ஏற்றத்துடன் நிறைவடைந்த இன்றைய பங்கு சந்தை.!

இந்திய பங்கு சந்தை வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் 162.94(+0.40%) புள்ளிகள் உயர்ந்து 40,707.31 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 40.85(+0.34%) புள்ளிகள் உயர்ந்து 11,937.65 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்தை நிறைவு செய்துள்ளது.

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த ராஷிகன்னா.!

அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.இந்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த அதிதி ராவ் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகியுள்ளார்.தற்போது இந்த படத்தின் கதாநாயகியாக ராஷி கன்னா ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 35 டன் வெங்காயம் இறக்குமதி.!

கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 35 டன் வெங்காயம் மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு, அதனை 70 ரூபாய்க்கு மொத்தமாகவும் ,75 ரூபாய்க்கு சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

“RRR” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்.!

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை நாளை காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அது படத்தின் டிரைலர் அல்லது டீசராக இருக்கக் கூடும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய அமித்ஷா.!

காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அதனுடன் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய 343 காவலர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளதாகவும், அவர்களின் தியாகத்தை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தேசிய காவலர் நினைவகம் வெறும் செங்கல், சிமெண்டுகளால் மட்டும் கட்டவில்லை … Read more

நற்செய்தி…வேலையில்லா பட்டதாரிகளுக்காக கடனுதவி திட்டம்.!

பட்டப் படிப்பு, பட்டய படிப்பு (டிப்ளமா), ஐடிஐ முடித்த தமிழகத்தில் வசிக்கும் பட்டதாரிகளுக்கு தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடனுதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அதன்படி உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சமாக ரூ.10 லட்சமும், அதிகபட்சமாக ரூ.5 கோடியும் கடனுதவி பெறலாம். கடனை பெறும் பட்டதாரிகள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பது அவசியம்.இதற்கான விண்ணப்ப்பத்தை சென்னையை சேர்ந்த பட்டதாரிகள் www.msmeonline.tn.gov.in/needs என்பதன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை … Read more

எருமையில் சவாரி செய்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் கைது.!

ராஷ்டிரிய உலமா கவுன்சில் கட்சியின் வேட்பாளர் முகமது பர்வேஸ் வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் கயா தொகுதியில் போட்டியிடுவதை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று எருமையில் சவாரி செய்து பிரச்சாரத்தை நடத்தியுள்ளார். அப்போது அவர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது மட்டுமின்றி, எருமை சவாரி செய்ததால் விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

பணத்தை திருப்பி செலுத்தவில்லையென்றால் சலுகைகள் ரத்து.!

கிசான் திட்டத்தில் முறைக்கேடாக பணத்தை கையாண்ட அனைவரும் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வேளாண்மைத் துறை மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் பணத்தை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.