முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா காலமானார்…!

முன்னாள் காங்கிரஸ் எம்.பி.துளசி அய்யா வயது முதிர்வு காரணமாக காலமானார்.  காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி அய்யா அவர்கள்,  1991-1996 ஆம் காலகட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில், இவருக்கு மத்திய அரசு வழங்கிய எந்த ஒரு சலுகையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பூண்டி வாண்டையார், என்றாலே தஞ்சை, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டங்களில் அவருக்கு என்று தனிப் பெரும் செல்வாக்கு உள்ளது. மகாத்மா காந்தியின் சீடராக வாழ்ந்து, எளிமையின் உருவாய் திகழ்ந்த … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…! 4,106 பேர் உயிரிழப்பு….!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,49,65,463 ஆகவும், உயிரிழந்தோர் … Read more

அசுரன் பட நடிகர் கொரோனா தொற்றால் காலமானார்…..!

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். சமீப நாட்களாக திரையுலகப் பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து … Read more

கால்வாயில் விழுந்த பாகிஸ்தான் பயணிகள் வேன் – 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!

பாகிஸ்தானில் பயணிகள் வேன் ஒன்று கால்வாயில் விழுந்த நிலையில், இதில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா எனும் மாவட்டத்தில் ஒரு குடும்பத்தினர் உறவினர்களை சந்திப்பதற்காக வேன் ஒன்றில் சென்றுள்ளனர். அதன் பின் உறவினர்களை சந்தித்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்களது வேன் பஞ்சாப் மாகாணத்தின் ஷேகுபுரா எனும் மாவட்டத்தில் உள்ள கான்குவா டோக்கன் எனும் பகுதியில் வந்தபோது அங்கு இருந்த … Read more

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண்…! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…!

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென்று எழுந்து அழுத பெண்.  மத்தியபிரதேசம், பரமத்தியில் உள்ள, முடலே என்ற கிராமத்தில் உள்ள சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது பெண்மணிக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது வீட்டின் தனிமை படுத்தப்பட்டார். ஆனால் அவரது நிலைமை மோசமடைந்ததையடுத்து குடும்பத்தினர் அவரை பரமத்தியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அப்பெண் தனியார் வாகனத்தின் மூலம் பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Read more

மாத சம்பளம் வாங்குபவர்கள் கொரோனா தொற்றால் இறந்தால் 7 லட்சம் வரை இழப்பீடு!எவ்வாறு பெறுவது???

தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு பணிபுரிபவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால்,இறந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தருகிறது.  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் தருகிறது. PF கணக்கு : இந்த நிவாரணத்தை பெற … Read more

அசாமில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த 18 யானைகள்…!

அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அசாமில், நாகான் மாவட்டத்தில் 18 யானைகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஆனால் வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவுதான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்துள்ளனர். இதுகுறித்து கதியாடோலி வனச்சரகத்தில் தலைமை வன காப்பாளர் அமித் ஷாகே  அவர்கள் கூறுகையில், அசாமின் எல்லைப்பகுதியான நாகான்-கார்பி ஆங்லாங்  எல்லையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.  புதன்கிழமை இரவு அங்கு இடி மின்னலுடன் … Read more

தொடரும் இஸ்ரேல், ஹமாஸ் மோதல் – 109 ஹமாஸ் படையினர் மற்றும் 7 இஸ்ரயேலர்கள் பலி!

இஸ்ரேலர்களுக்கு காசா முனையில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 109 ஹாமஸ் படையினரும் 7 இஸ்ரேலர்களும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், காசா முனையை ஆட்சி செய்து  வரக்கூடிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதி வருகிறது. இந்த ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலர்களுக்கும்  இடையே அடிக்கடி வான்வழி தாக்குதல் மூலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. … Read more

தூங்கிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்ததால் உயிரிழந்த கூலித்தொழிலாளி – நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

பெங்களூரில் நேற்று முன்தினம் கட்டுமான தொழிலாளி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்ததில் அந்த நபர் துடி துடித்து உயிரிழந்துள்ளார். செல்லப்பிராணிகள் என்றாலே தற்பொழுது அதிக அளவில் அனைவர் வீட்டிலும் வளர்க்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. நாய், பூனை, முயல், அணில் என ஒவ்வொரு சின்ன சின்ன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அவற்றை வெளியில் வாக்கிங் அழைத்துச் செல்வதும் வழக்கம். அதுபோல பெங்களூரில் உள்ள எலகங்கா காவல்சரகத்தில் உள்ள … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்! காசாவில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதலில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,இஸ்ரேலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் … Read more