#Breaking : இந்தியாவில் கண்டறியப்பட்ட புதியவகை ஒமிக்ரான் திரிபு.!

இந்தியாவில் 3 பேருக்கு ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனாவில் மீண்டும் தொடங்கிய புதிய வகை கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. புதிய வகை ஒமிக்ரான் வகை இந்தியாவில் 2 மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குஜராத்தில் 2 பேருக்கும், ஒரிசாவில் ஒருவருக்கும் புதிய வகை ஒமிக்ரான் திரிபு BF.7 எனும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் படையெடுக்கும் கொரோனா.! அதிகரிக்க போகும் உயிரிழப்புகள்.? சீன சுகாதர நிபுணர் எச்சரிக்கை.!

அடுத்த 90 நாட்களில் (3 மாதங்கள்) சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். – சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங்.  உலகையே அச்சுறுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தற்போது தான் மக்கள் கொஞ்சம் மறந்து மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால், தற்போது சீன சுகாதார நிபுணர் வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளை சற்று அச்சுறுத்தியுளளது. சீன சுகாதார நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் கொரோனா தொற்று பற்றி கூறுகையில், ‘  அடுத்த 90 … Read more

உலகில் கோவிட்-19 எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் 90% பேர்.! ஆனாலும் ஓர் ஆபத்து.! WHO சிறப்பு தகவல்.!

உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் 19 தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வந்தனர். இருந்தாலும், கொரோனா வைரஸ் கோவிட் 19 எனும் மாறுபாட்டை தாண்டி அடுத்தடுத்த … Read more

கோவிட் தடுப்பூசியினால் ஒரு பெண் இறப்பு.? 1000 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு.!

உலகை அச்சுறுத்திய கொரோனா எனும் பேராபத்தில் இருந்து நம்மை காப்பாற்றியதில் பெரும்பங்கு கொரோனா தடுப்பூசிக்கு உண்டு. ஆனால் அந்த தடுப்பூசி காரணமாக தனது மகள் இறந்துவிட்டார் என ஒரு தந்தை மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, கோவிட் ஷீல்ட்டு எனும் வகை தடுப்பூசியை திலீப் லுனாவத் என்பவரின் மகள் செலுத்தியதாக தெரிகிறது. அண்மையில் தடுப்பூசி செலுத்திய அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, தனது மகள் இறப்புக்கு தடுப்பூசி தான் காரணம். அதன் பக்க … Read more

ரஷ்யாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் தொடர்ந்து 2வது நாளாக 50,000க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக, ரஷ்யாவில் 50,000 க்கும் மேற்பட்ட புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. மற்றும் 51,699 சோதனைகள் பாசிட்டிவ் ஆக வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 92 கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன என்று கொரோனா வைரஸ் பணிக்குழு தெரிவித்துள்ளது. ரஷ்யா வெள்ளிக்கிழமை 50,952 புதிய COVID-19 தொற்று பாதிப்புக்கள் பதிவுசெய்தது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் … Read more

கோவிட் வரலாறு உள்ளவர்களுக்கு இதய நோய்கள் வர அதிக வாய்ப்பு!!

நோய்த்தொற்றின் வரலாறு இல்லாதவர்களை விட, கோவிட்-19 உயிர் பிழைத்தவர்களிடையே இதய நோய்களை உருவாக்கும் ஆபத்து “கணிசமான அளவில்” அதிகமாக உள்ளது என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2019 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில் SARS-CoV-2 சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மொத்தம் 4,131,717 பங்கேற்பாளர்களின் சோதனை முடிவுகளின் அடிப்படையில் கோவிட்-19 உயிர் பிழைத்தவர்கள்,  பெருமூளை இரத்த நாள நோய், பக்கவாதம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உள்ளிட்ட அரித்மியா தொடர்பான கோளாறுகள், மாரடைப்பு … Read more

கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19!! மக்கள் பூஸ்டர் ஷாட் பெற அரசாங்கம் வலியுறுத்தல்!!

கோவிட்-19  அதிகரித்து வருவதை எடுத்துரைத்த கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர், 17 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் ஷாட்களை எடுத்துள்ளனர் என்றும், மக்கள் பூஸ்டர் ஷாட் பெறுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (டிஏசி) சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த தேசத்திலும்  கோவிட்-19 ஒரு உயர்வைக் காண்கிறது. கர்நாடகத்தின் கோவிட்-19 வழக்குகள் தற்போது 7.2 சதவீத அதிகமாக உள்ளது. பெங்களூரு, ஷிவமொக்கா, பாகல்கோட், பெல்லாரி போன்ற நகரங்களில் உள்ள மாநில … Read more

கார்பெவாக்ஸ் நாளை முதல் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்..

நாளை (ஆகஸ்ட் 12) முதல் பொது மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸாக கார்பெவாக்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்பெவாக்ஸ் ஆனது, கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அங்கீகரிக்கப்பட்ட முதல் இந்திய தடுப்பூசியாகும். “ஜூன் 4, 2022 அன்று 18 வயதுடைய தனிநபர்களுக்கான கோவிட்-19 பூஸ்டர் டோஸாக அவசரகால பயன்பாட்டிற்கான தடுப்பூசியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அங்கீகரித்த பிறகு இந்த ஒப்புதல் கிடைத்தது” என்று BE இன் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. பயோலாஜிக்கல் இ … Read more

ஒற்றை சிரிஞ்ச் மூலம் 30 மாணவர்களுக்கு போடப்பட்ட COVID-19 தடுப்பூசி

மத்திய ஓரதேசத்தில் 30 மாணவர்களுக்கு 1 சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஜூலை 27) மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள ஒரு பள்ளியில் சுமார் 30 குழந்தைகளுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தடுப்பூசி போடுபவர் ஜிதேந்திர ராய் கூறுகையில், “தடுப்பூசி போடுவதற்கு அவர்கள் எனக்கு ஒரு சிரிஞ்ச்  கொடுத்தார்கள், அதனால் தான் ஒரே சிரிஞ்சில் இருந்து 30 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டேன், இது … Read more

குரங்கு காய்ச்சலில் இருந்து கோவிட்-19 வரை, நோய்களின் மையமா கேரளா??

சிக்குன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல், கடுமையான மூளையழற்சி நோய்க்குறி, மேற்கு நைல் மூளையழற்சி, டெங்கு, வைரல் ஹெபடைடிஸ், நிபா, பன்றிக் காய்ச்சல், கோவிட்-19 மற்றும் குரங்கு அம்மை என அனைத்தும் நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் கேரளா 3 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது, ஆனால் பல வெளிநாட்டினர் வசிக்கின்றனர். வேலைக்காகவோ அல்லது படிப்புக்காகவோ கேரளாவைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். கேரளாவைத் தவிர, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் … Read more