இரு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி.!

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர கால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக போடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்புட்னிக், பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரே டோஸ் போடும் வகையில் … Read more

கோவிஷீல்டு உற்பத்தித்திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்..!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை பாதித்து வருகிறது. இதன் காரணத்தால் இதிலிருந்து காத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா கோவிஷீல்டு, கோவேக்சீன் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தித்திறனை 120 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக மத்திய அரசு, மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ளனர். இது … Read more

#BREAKING : ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி -சோதனைக்கு ஒப்புதல்..!

ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவருக்கு இருவேறு கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தலாமா..? அல்லது வேண்டாமா..? என பரிசோதனை மேற்கொள்ள நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நபர் முதல் தவணையில் எந்த தடுப்பூசியை செலுத்தி கொள்கிறாரோ அதே தடுப்பூசியை தான் 2-வது தவணையிலும் செலுத்தி கொள்ளும் நடைமுறை உள்ளது. … Read more

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி…! செப்டம்பரில் ஆய்வு முடிவு…! – எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா

குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் செப்டம்பருக்குள் வரும் என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மூன்றாவது அலை பரவக் கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த … Read more

65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்!!

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம். டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 … Read more

கடலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு-ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்..!

கடலூரில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.  கொரோனா பரவல் நாட்டில் அதிகரித்து வந்ததை அடுத்து தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது தீவிரமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நடந்துகொண்டிருக்கிறது. பொது மக்களும் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை அடுத்து இன்று கோவாக்ஸின் தடுப்பூசி கடலூர் அரசு மருத்துவமனையில் போடப்படும் என்ற … Read more

கோவாக்ஸின் தடுப்பூசி ஆல்பா, டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான செயல்பாடு-அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி தற்போது அதிகமாக பரவி வரக்கூடிய டெல்டா மற்றும் ஆல்பா கொரோனா வைரஸ்களுக்கு எதிராக திறம்பட செயல்படுவதாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டன் மற்றும் இந்தியாவில் முதலில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்து வெளியிட்டுள்ள … Read more

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே பள்ளிகளை திறப்பதற்கு வழி – எய்ம்ஸ் தலைவர்..!

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி..!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியிலும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் … Read more

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO -விடம் விரைவில் ஒப்புதல் பெறவேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்!

கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஒப்புதல் பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் வி அஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் … Read more