கையிருப்பில் 20 கோடி தடுப்பூசி உள்ளது – சீரம் நிறுவன CEO தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்பொழுதும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஆதர் பூனவல்லா, ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 4 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தங்கள் கையிருப்பில் 20 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள அனுமதி.!

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு நடத்த இந்திய மருந்து கட்டுப்பாடு வாரியம் அனுமதி. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர கால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகள், இரண்டு டோஸ்களாக போடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஸ்புட்னிக், பைஸர் போன்ற தடுப்பூசிகளுக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதுபோன்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஒரே டோஸ் போடும் வகையில் … Read more

கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிக்கிறது – ஆய்வில் தகவல்!

கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிப்பதுடன், உயிரிழப்பிலிருந்து 98% பாதுகாப்பளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93 சதவீத பாதுகாப்பையும், உயிரிழப்பிலிருந்து 98 சதவீத பாதுகாப்பையும் அளிக்கிறது என இராணுவ  மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more