மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கிய சீரம் நிறுவனம்..!

சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், கொரோனா அச்சம் எழுந்துள்ள நிலையில் … Read more

கையிருப்பில் 20 கோடி தடுப்பூசி உள்ளது – சீரம் நிறுவன CEO தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்பொழுதும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஆதர் பூனவல்லா, ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 4 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தங்கள் கையிருப்பில் 20 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.