நடிகர் விஜய் கார் வழக்கு – நடிகர் விஜய் இதை செய்திருந்தால் அபராதம் விதிக்க கூடாது : உயர்நீதிமன்றம்

நடிகர் விஜய் இறக்குமதி  காருக்கு 2019 முன் முழு நுழைவரியை செலுத்தி இருந்தால் விஜய்க்கு அபராதம் விதிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.  நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 காருக்கு வரி செலுத்துமாறு  வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனைஎடுத்து, உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவு … Read more

கட்சி தனக்கு எதிராக உள்ளதாக கருதி வழக்கை தாக்கல் செய்துள்ளார் ஓ.பி.எஸ் – ஈபிஎஸ் தரப்பு அதிரடி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற … Read more

#BREAKING : ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டனவா? – நீதிபதி கேள்வி

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா? என நீதிபதி கேள்வி.  அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேறு நிவாரணங்களைப் பெற உயர் நீதிமன்றத்தை அணுக தெரிவித்துள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வேறு என்ன நிவாரணம் கோரியிருக்கிறீர்கள் எனக் கேள்வி … Read more

#BREAKING : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு – விசாரணை தொடக்கம்..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை தொடக்கம். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். வருகின்ற … Read more

இதுபோன்ற மாற்றங்கள் நீதித்துறையில் வரவேற்கத்தக்கவை – மநீம

ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு மநீம வரவேற்பு. ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்து மநீம கட்சி ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அமல்படுத்தியுள்ளது … Read more

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்..!

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் ஈபிஎஸ் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என உத்தரவிட்டிருந்தது. அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு … Read more

2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய அனுமதி – உயர்நீதிமன்றம்

2,213 புதிய பேருந்துகளையும், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் செய்ய போக்குவரத்துக் கழகத்திற்கு அனுமதி. கடந்த 2016-ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார், சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் அணுகு முறையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய … Read more

மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத வெறியர்களுக்கு செருப்படி! – அமைச்சர் மனோ தங்கராஜ்

பாஜகவின் மத வெறி அரசியல் தமிழகத்தில் என்றும் எடுபடாது என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எந்த மதத்தினரும் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்ற மதுரை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போலி ஆன்மிகம் பேசும் பாஜக மத … Read more

உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாது – ஈபிஎஸ் தரப்பு

முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார் என ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், … Read more

நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் … Read more