நாட்டு மக்கள் அனைவரிடமும் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி

நுபுர் சர்மா நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி  வருகிறார்.இவர், பா.ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, சமூகவலைதளத்தில் அந்த கடைக்காரரின் எட்டு வயது மகன் ஒரு  பதிவிட்டுள்ளார். இதனால், கோபமடைந்த சில மர்மநபர்கள், அவருடைய கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி அவரின் தலையை துண்டித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்து இருந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நுபுர் சர்மா தன மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து, நீதிபதிகள் கூறுகையில், நுபுர் சர்மா மற்றும் அவரது வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு நுபுர் சர்மாவின் செயல்பாடுகள் தான் காரணம் என்று கூட்டம் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிவதற்கு நுபுர் சர்மா தான் காரணமாக உள்ளார். ஆனால் நிவாரணம் கூறி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கு அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றக் கோரிய வழக்கை  விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் இனி நாடு முழுவதும் உள்ள வழக்குகளை அனைத்தையும் அவர் நேரில் சென்று எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment