அதிர்ச்சி தகவல்.! நாடு முழுவதுமான கொரோனா பாதிப்பில் 10 சதவீத பங்கை பெற்றுள்ளது சென்னை.!

மும்பை, டெல்லி, சென்னை, தானே, அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா பாதிப்பே தேசிய அளவில் 50 சதவீத கொரோனா பாதிப்பு பங்கை பெற்றுள்ளது.  இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரையில், 3,41,091 பேர் இந்தியாவில் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  நாடு முழுவதும் குறிப்பிட்ட 15 நகரங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பே மொத்த பாதிப்பில் 63 சதவீதமாக உள்ளது. அதே போல … Read more

#Breaking: 22ஆம் தேதி வீடு தேடி வருகிறது ரூ.1000.. முதல்வர் உத்தரவு!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 வீட்டிற்கே சென்று வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டார். சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு … Read more

#BREAKING: சென்னையில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில்  கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 -ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 33,243 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில் 15,385 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,17,476 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 382 பேர் உயிரிழந்துள்ளனர். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.. அரசு அறிவிப்பு!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய … Read more

இனி உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட முடியாது.. தமிழக அரசு அதிரடி!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதில், அத்தியாவசிய … Read more

கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை!

கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட நாய்களுக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த, கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால், ஊழியர்களுக்கு கொரோனா … Read more

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக “மைக்ரோ திட்டம்”

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கம், ஒரு நாளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தாக்கும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அம்மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மைக்ரோ திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம், சென்னையில் உள்ள … Read more

சென்னையிலிருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பு – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

சென்னையில் இருந்து வருவோரால் கொரோனா அதிகரிப்பதாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், சென்னையில் இருந்து வருவோரால், புதுச்சேரியில் கொரோனா அதிகரிப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  மேலும், தொற்று உள்ளோரிடம் இருந்து பரவுவதால் புதுச்சேரி மக்கள் எச்சரிக்கையாக இருக்க … Read more

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – சென்னை மாநகராட்சி

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தல். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரசால், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் நெகட்டிவ் எனா முடிவுகள் … Read more

கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே 14 நாட்கள் தனிமை.! வெளியான அதிரடி உத்தரவு.!

பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சென்னையில் இருந்து வெளியேற யாருக்கும் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட … Read more