கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை.. அரசு அறிவிப்பு!

சென்னை உட்பட நான்கு மாவட்டத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதில், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (containment zones) வசிக்கும் பணியாளர்கள் யாரும் பணிக்கு வரத் தேவையில்லை. மேலும், அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற வேண்டும் என தெரிவித்தனர்.