கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தல் – சென்னை மாநகராட்சி

கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்தல்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், இதனை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இதுவரை இந்த கொரோனா வைரசால், 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் நெகட்டிவ் எனா முடிவுகள் வந்த பின்பு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. 

 பரிசோதனை மேற்கொள்வோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த முடிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.