டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் சல்யூட்.!

கொரோனாத் தொற்று குணமடைந்தது ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தனி ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு வருகைத்தந்தார். வெள்ளைமாளிகை மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் முகக்கவசத்தை கழற்றி சல்யூட் அடித்து தனது ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவிப்பது போல அவரது செய்கை இருந்து. கடந்த வெள்ளியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சனிக்கிழமை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி உடல்நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை … Read more

கொரோனா வந்தால் நேராக சென்று மம்தாவை அனைத்துக் கொள்வேன் -பிஜேபி செயலாளர் சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம்

கொரோனாவில் நான் பாதிக்கப்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டி அணைத்துக் கொள்வேன். என்று பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ராவின் கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. சமீபத்தில் தான் பாஜக அனுபம் ஹஸ்ராவை தேசியச் செயலாளராக நியமித்தது. இந்நிலையில் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக சிலிகுரி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாரூபூரில் பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியில் தேசியச் செயலாளர் அனுபம் ஹஸ்ரா … Read more

மணீஷ்சிசோடியாவுக்கு கொரோனா-டெங்கு!! மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டில்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியாவுக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது . டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கடந்த செப் 14ந்தேதி  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் தன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.அதன் பிறகு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த புதன் கிழமை டில்லி லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொரோனா பாதித்த அவருக்கு டெங்குவாளும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் அவருடைய உடல்நிலை சீராக … Read more

#மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் (68) நேற்று இரவில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட  உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு  பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்கள் தேமுதிக கட்சி தொண்டர்கள் மத்தியில் கடும் … Read more

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் 3 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100- க்கு கீழ் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்பொழுது குறையத் தொடங்கியது. அந்தவகையில், இன்று 97 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று … Read more

தமிழகத்தில் இன்று கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் 72 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் நேற்றும் இன்றும் உயிரிழப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது, இன்று 80 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 80 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 80 பேரில், தனியார் … Read more

கேரளாவில் இதுவரை 30,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,725 பேருக்கு கொரோனா உறுதி. கேரளாவில் இன்று 1,725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 13 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல். 15,890 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து 1,131 பேர் குணமடைந்தனர். இதுவரை 30,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சுகாதார பணியாளர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு. இந்தியா முழுவதும் கொரோநா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்காளாக னைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசும், கல்வித்துறையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் … Read more

கொரோனா காரணமாக 100 கோடிக்கு அதிகமான மாணவர்கள் பாதிப்பு – ஐ நா

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்தார். குறைந்தது 4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தங்களது தொடக்க கல்வியை இழந்துள்ளனர் என்று கூறினார். இதனால் ஒரு தலைமுறையே பேரழிவை எதிர் கொள்கிறது என்று அவர்  தெரிவித்தார்.